மண்கும்பான் ஜும்மா பள்ளிவாசலுக்கு நீர் இறைக்கும் இயந்திரம் அன்பளிப்பு » Sri Lanka Muslim

மண்கும்பான் ஜும்மா பள்ளிவாசலுக்கு நீர் இறைக்கும் இயந்திரம் அன்பளிப்பு

mo6

Contributors
author image

Farook Sihan - Journalist

யாழ்ப்பாணம் வேலணை மண்கும்பான் வெள்ளைக்கடற்கரை ஜும்மா பள்ளிவாசலுக்கு நீர் இறைக்கும் இயந்திரம் யாழ் கிளிநொச்சி உலமா சபை கிளை தலைவர் சுபியான் மௌலவியினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஜூம்ஆப் பள்ளிவாசலின் வேண்டுகோளை ஏற்று¸ பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் நீர்
இறைக்கும் இயந்திரமும்¸ அதற்குரிய பொருட்களும் அண்மையில் யாழ்ப்பாணம் மக்கள்
பணிமனை அலுவலகத்தில் வைத்து சுபியான் மௌலவியினால் வழங்கப்பட்டது.

அத்துடன் குறித்த பள்ளிவாசலிற்கான மலசல கூட வசதியினை நவீன முறையில் திருத்துவதற்கான நடவடிக்கையும் இவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த கால யுத்தத்தினால் மிகவும் பாதிப்பிற்கு உள்ளான இப்பள்ளிவாசல் தற்போது பலரது முயற்சியின் பலனாக மிளத் திருத்தப்பட்ட வருகின்றது.

mo

Web Design by The Design Lanka