மண்டேலாவின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க ஜனாதிபதி தென் ஆபிரிக்கா பயணம் - Sri Lanka Muslim

மண்டேலாவின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க ஜனாதிபதி தென் ஆபிரிக்கா பயணம்

Contributors

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த நெல்சன் மண்டேலாவின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தென் ஆபிரிக்காவுக்குப் பயணமானார்.

தென் ஆபிரிக்கா சென்றடைந்த ஜனாதிபதி இன்றும், நாளையும் நெல்சன் மண்டேலாவின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் மண்டேலாவின் இறுதிக் கிரியைகள் செவ்வாய்க்கிழமை ஜொஹன்னஸ் பேர்க்கில்

உள்ள எப்.என்.பி மைதானத்தில் நடைபெறுகின்றன.

மண்டேலாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அனைத்து மக்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் இறுதி ஆராதனை சேவைகள் நடத்தப்படுகின்றன. பெருந்தொகையான அரச தலைவர்களும் இராஜதந்திரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். நாளையதினம் அரச யூனியன் கட்டடத்தில் வைக்கப் படவுள்ள மண்டேலாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரிட் டோரியாவுக்குச் செல்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்விஜயத்தை முடித்துக் கொண்டு கென்யாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அங்கு கென்ய ஜனாதிபதி உகுறு கென்யாட்டாவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். இதனைத் தொடர்ந்து ஐ.நா சூழலியல் திட்ட அதிகாரிகளுடனும், ஐ.நா குடியிருப்பு திட்ட அதிகாரிக ளுடனும் கலந்துரையா டல்களை நடத்தவுள்ளார். வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு எம்.பி சஜின்.டி.வாஸ் குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இவ்விஜயத்தில் இணைந்துள்ளனர்.(thinakaran)

Web Design by Srilanka Muslims Web Team