மண் நிறம் நூலும் அதன் ஆசிரியரும் - எழுத்தாளனின் பார்வையில் » Sri Lanka Muslim

மண் நிறம் நூலும் அதன் ஆசிரியரும் – எழுத்தாளனின் பார்வையில்

book - man niram

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எழுத்தாளர், கவிஞர் – பாவேந்தல் பாலமுனை பாறூக்


வாசிப்பு நேரத்தின் பல மணித் துளிகளை முகநூல் விழுங்கி விடுகின்ற இந்த நாட்களி்ல்,அதிலிருந்து தப்பித்துக் கொண்டு,” மண் நிற”த்தை வாசித்துக் கொள்ளக் கிடைத்தது மிகப் பெரிய திருப்தி.

மண் நிறம், எம் அப்துல் றஸாக் அவர்களின் புதிய படைப்பு.பெருவெளி,துயரி,மனிதம் இதழ்களின் செயற்பாட்டாளர்,வாக்கு மூலம்,எழுத்துப்பிழை என்னும் நூல்களின் ஆசிரியர். பிரபலமான உயர்தர வகுப்புத் தமிழாசான்.திறனாய்வாளர்- அப்துல் றஸாக்.

மண்ணுக் கென்று ஒருதனித்த நிறமிருக்கிறதோ இல்லையோ,றஸாக்கின் மண் நிறத்திற்கு ஒருதனித்த சுவை இருக்கின்றது,நடை இருக்கின்றது என்பதனை அதனை வாசிக்கும் தோறும் உணரமுடிகின்றது.

அவருடைய சுபாவம் போலவே மென்மையாக ,தெளிந்த நீரோடையாக,
இயல்பான மொழியில் இயற்கை அழகில் படைப்புக்கள விரிந்திருக்கின்றன.

“யதார்த்தமும் கற்பனையும் கலந்த புனைவுகள்தான் இவை”என்றும் சொல்ல முடியாதவாறு,கற்பனை கலக்காத ,வர்ணப்பூச்சுகளில்லாத படைப்புகளாக மலர்ந்திருப்பவை அவருடைய ஆக்கங்கள்.

இவருடைய எழுத்துக்கள் அவற்றிற்கான வடிவத்தைப் பெற்றுக் கொண்டு வாசகர்மனதில் அப்பிவிடுகின்றன என்பதுதான் உண்மை. .கதையா,கட்டுரையா,என்ற வடிவ அக்கறையை விட வாசகர்ஈர்ப்பு முக்கியமானதல்லவா? அதனை மிகநேர்த்தியாக,எளிமையான இலகுவான மொழியழகில் நிறைவுசெய்யும் படைப்பு மண் நிறம்.

பாத்தும்மாவின் பாம்புவில் வரும் -ஜெய்லானிக் காட்சிகள்.காட்டுபீவியினதும் கஞ்சா பாவாவினதும் நடவடிக்கைகள் கண்முன் படமாக இப்போதும் விரிகின்றன.

கூட்டிக்கொண்டு ஓடுதலில் வரும் உம்மாவுக்காக இப்பொழுதும் நெகிழ்ந்துகொள்கிறது மனம்.சம்பவம்1,2,3,4
என்று சம்பவங்களை நிரலிடும் உத்தியில் “கூட்டிக் கொண்டு ஓடுதல்” புதிய மெருகு பெறுகின்றது. 2வது சம்பவத்தில் வரும் பலகலைக்கழக இதழாசிரியனுக்காக இப்பொழுதும் உள்ளம் பரிதாப ப் பட்டுக்கொள்கிறது.

எனது வாசிப்பு அனுபவத்தை முழுமையாகச் சொல்ல எண்ணுகின்ற போதும் அப்படைப்புகள் தருகின்ற சுகானுபவத்தை அப்படியே என்னால் பிரதிபலிக்க முடியும் என்று நான்நம்பவில்லை. அவரவரின் வாசிப்பில் கிடைக்கும் இன்பமது.

நல்லதொரு வாசிப்பு இன்பத்தைப் பெற மண்நிறம் பெரிதும் உதவும் என்பது எனது நம்பிக்கையாகும்.வயதைப் பொறுத்து 2016ல் இளங்கலைஞர் விருது பெற்றவர் றசாக். book - man niramஅவருடைய படைப்புகளின் மூலம் இன்னும் தேர்ந்த கலைஞராக அவர் பரிணமிப்பார்.- வாழ்த்துகள்.

Web Design by The Design Lanka