மதுக்கடையைத் திறப்பது தவறில்லை, திறக்கப்பட்டமைக்கான பொறுப்பை நான் ஏற்கிறேன்- டிலான் பெரேரா..! - Sri Lanka Muslim

மதுக்கடையைத் திறப்பது தவறில்லை, திறக்கப்பட்டமைக்கான பொறுப்பை நான் ஏற்கிறேன்- டிலான் பெரேரா..!

Contributors

மதுக்கடையைத் திறக்க அறிவுறுத்தல் விடுத்தவர்கள் இல்லை யென்றால் அந்தப் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்ளத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

மது அருந்துவதை சட்டத்தால் தடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதுபானக் கடைகளைத் திறப்பது குற்றமல்ல என்றும், நாடு முடக் கப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணமுள்ளவர்கள் விலை உயர்ந்த மதுபானத்தை அருந்துவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுக்கடை திறக்கப்பட்டுள்ள நிலையில், ​​அதை விரும்புவோர் குடிக்கலாம், விரும்பாததோர் குடிக்காது விடலாம் என்றும் ஊடகச் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team