மதுபான நிலையங்களைத் திறந்தது விஞ்ஞான பூர்வமான அமைச்சரவை போன்றது; இத் தீர்மானத்தை எடுத்த முட்டாள்கள் யார்? - கீதா எம்.பி..! - Sri Lanka Muslim

மதுபான நிலையங்களைத் திறந்தது விஞ்ஞான பூர்வமான அமைச்சரவை போன்றது; இத் தீர்மானத்தை எடுத்த முட்டாள்கள் யார்? – கீதா எம்.பி..!

Contributors

மதுபான விற்பனை நிலையங்களைத் திறந்தது விஞ்ஞானபூர்வமான அமைச்சரவையை நியமிப்பது போன்றது என பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

சிறந்த அறுவடையை எதிர்பார்த்து சிறிது சிறிதாகத் தண்ணீர் சேகரித்து வந்த ஏரியை ஒரே முறையில் திறந்து விட்டு முழு அறுவடையும் நாசமாகியது போன்ற செயலாக இது அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

யார் இந்த முட்டாள்தனமான தீர்மானத்தை எடுத்தது என்பதை அறிய விரும்புவதாகவும் இது போன்ற செயல்களால் தன்னால் பாராளுமன்ற உறுப்பினராக கிராமத்துக்குச் செல்ல இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் மதுக்கடைகளைத் திறப்பது ஏற்புடையதல்ல என் பதை எந்த முட்டாளும் புரிந்து கொள்வார் என்றும் சிறு குழந்தை கூட அதைச் சொல்லும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team