மதுபோதையில் குழப்பம் விளைவித்த பிக்குவுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது! - Sri Lanka Muslim

மதுபோதையில் குழப்பம் விளைவித்த பிக்குவுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது!

Contributors

மதுபாதையில் குழப்பம் விளைவித்த பௌத்த பிக்கு ஒருவர் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதை அடுத்து நீதிமன்றம் அவருக்கு 3 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்துள்ளது.

சந்தேக நபரான பிக்கு குருபேவில பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் மதுபோதையில் குழப்பம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இறத்தோட்டை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவல் ஒன்றை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிசிர பண்டாரவின் ஆலோசனையின் படி பிக்கு கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிக்கு விகாரையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.lw

Web Design by Srilanka Muslims Web Team