மத்தியக் கிழக்கில் கிறித்தவர்கள் நிலை குறித்து போப் கவலை - Sri Lanka Muslim

மத்தியக் கிழக்கில் கிறித்தவர்கள் நிலை குறித்து போப் கவலை

Contributors

கிறித்தவர்கள் இல்லாத மத்தியக் கிழக்குப் பகுதி ஒன்று உருவாகும் நிலையை வத்திக்கான் ஒப்புக்கொள்ளாது என்று இராக், சிரியா, லெபனான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து வந்த கத்தோலிக்க தலைவர்களிடையே பேசிய போப் பிரான்ஸிஸ் குறிப்பிட்டார்.

ரோம் நகரில் மத்தியக் கிழக்கு பகுதியிலிருந்து வந்த பேராயர்களை சந்தித்த போப், இந்தப் பகுதியில் குறைந்துவரும் கிறித்தவ சமூகங்கள் எதிர்கொள்ளும் அபாயங்களைப் பற்றி அவர்களுடன் விவாதித்தார்.

இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மற்றும் அரபு வசந்தம் ஏற்பட்டதிலிருந்து அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக பல லட்சக்கணக்கான கிறித்தவர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறிவிட்டனர்.

திங்களன்று போப் பிரான்ஸிஸ் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டினை சந்திப்பார்.மத்தியக் கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறி வரும் ஆர்த்தடாக்ஸ் கிறித்தவர்களுக்கு மாஸ்கோ அதிக அளவில் ஆதரவு அளித்து வருகிறது. இவர்களில் பலர் ரஷ்ய குடியுரிமை கோரி விண்ணப்பித்து வருகின்றனர். tn

Web Design by Srilanka Muslims Web Team