மத்தியமுகாம் சாளம்பைக்கேணி சங்களுக்கு உபகரணம் கையளிப்பு » Sri Lanka Muslim

மத்தியமுகாம் சாளம்பைக்கேணி சங்களுக்கு உபகரணம் கையளிப்பு

d

Contributors
author image

எம்.எம்.ஜபீர்

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் இவ்வருடத்திற்கான கிழக்கு மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் மத்தியமுகாம் சாளம்பைக்கேணி பல்தேவை மண்டபத்தில் நேற்று தெரிவு செய்யப்பட்ட சங்கங்களிற்கு கையளிக்கப்பட்டன.

இதன்போது சாளம்பைக்கேணி-03 குறைசியா முதியோர் சங்கத்திற்கு மழை காலங்களில் ஜனாஸா நல்லடக்கத்தின் போது கப்று வெட்டுவதற்காக பயன்படுத்துவற்கான கூடார தொகுதியும், சாளம்பைக்கேணி-03 நியூவே இளைஞர் கழகத்திற்கு அலுவலக தளபாடங்களும் கையளிக்கப்பட்டன.

சாளம்பைக்கேணி-03 சமூக இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.எம்.றியாழ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் ஏ.அப்துல் மஜீட், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் ஏ.சீ.நிஸார், சாளம்பைக்கேணி-03 கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எஸ்.எச்.அன்வர், நுராணிய ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் ஜெ.செயின், முதியோர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர். d.jpeg2

Web Design by The Design Lanka