மத்தியமுகாம் நகரில் நோர்வே நாட்டு மக்களின் நிதி உதவியில் சர்வதேச ஆங்கில மொழி பாடசாலை கட்டத்திற்கான அடிக்கல்நடும் நிகழ்வு » Sri Lanka Muslim

மத்தியமுகாம் நகரில் நோர்வே நாட்டு மக்களின் நிதி உதவியில் சர்வதேச ஆங்கில மொழி பாடசாலை கட்டத்திற்கான அடிக்கல்நடும் நிகழ்வு

DSC04065

Contributors
author image

எம்.எம்.ஜபீர்

மத்திய முகாம் நகரில் நோர்வே நாட்டு மக்களின் நிதி உதவியில் அமையப்பெறவுள்ள 02 மாடிகளைக் கொண்ட சர்வதேச ஆங்கில மொழி பாடசாலை கட்டத்திற்கான  அடிக்கல் நேற்று  நாட்டி வைக்கப்பட்டது.
    
இந்நிகழ்வில் ஆரம்ப கைத்தொழில் அமைச்சரும் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான தயாகமகே பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மஞ்சுல பெர்ணாண்டோவின் ஏற்பாட்டில் முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நோர்வே நாட்டின் பிரதிநிதியாக லோட்டஸ் ஹெல்பேன் நிறுவனத்தின் பணிப்பாளர் விலி பீட்டஸ்ஸன்,  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் ஏ.கே.அப்துல் சமட், அம்பாரை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரணகல, மத்தியமுகாம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம்.ஏ.விஜயசிங்க, மத்தியமுகாம் வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.பீ.நுவான், உள்ளிட்ட உயர் அதிகாரிகள், சமய தலைவர்கள், பொது மக்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் முதலாவதாக அமையப்பெறவுள்ள இப்பாடசாலை கட்டிடம் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் ஆரம்ப கட்டமாக தரம் 01 தொடக்கம் தரம் 05 வரையிலான வகுப்புக்கள் நடாத்தப்படவுள்ளதுடன் ஒரு வருடத்திற்கு  மூவினங்களையும் சேர்ந்த தலா 20 மாணவர்கள் எனும் விகிதத்தில் 60 மாணவர்கள் கல்வி கற்hதற்காக இணைத்து கொள்ளப்படவுள்ளனர். இதனுடாக நாட்டிலுள்ள அனைத்து சமய மாணவர்களும் ஒரு மொழியை கற்பதன் ஊடாக ஒற்றுமையை மேலோங்க செய்ய முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Web Design by The Design Lanka