மத்திய வங்கியின் ஆளுநராக அரசியல்வாதியை நியமித்தால் இலங்கையின் பொருளாதாரம் கறுப்புபட்டியலில் சேர்க்கப்படலாம் - ஜே.விபி..! - Sri Lanka Muslim

மத்திய வங்கியின் ஆளுநராக அரசியல்வாதியை நியமித்தால் இலங்கையின் பொருளாதாரம் கறுப்புபட்டியலில் சேர்க்கப்படலாம் – ஜே.விபி..!

Contributors

இலங்கை மத்திய வங்கிக்கு அரசியல்வாதியொருவரை ஆளுநராக நியமிப்பதால் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படும் என ஜேவிபி தெரிவித்துள்ளது.
2008 முதல் 2012 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய திறைசேரி பிணைமுறி பரிமாற்றங்கள் மூலம் இலங்கைமக்களின் 14 பில்லியன் ரூபாயினைஅபகரித்தவர் அஜித் கப்ரால் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் கிரேக்கத்தின் கருவூல பத்திரங்களை அஜித் கப்ரால் எப்படி கொள்வனவு செய்தார் என ஜேவிபியின் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அஜித் கப்ராலை நியமிப்பது இலங்கையின் அரசியல் நிலைநிலைமை குறித்து சர்வதேச சமூகம் கொண்டுள்ள நிலைப்பாட்டினை மேலும் மோசமாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
சுயாதீன அமைப்பை அரசியல்வாதி கைப்பற்றுவதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் கறுப்புபட்டியலில் இணைக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team