மந்திரிகளின் பென்ஸ் கார் கனவு முடிவுக்கு வந்தது ! - Sri Lanka Muslim

மந்திரிகளின் பென்ஸ் கார் கனவு முடிவுக்கு வந்தது !

Contributors

இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட 54 பென்ஸ் கார்கள் இறக்குமதி செய்த நிறுவனங்களிடம் இருந்து வாடகை அடிப்படையில் பெற்றதாக அரசாங்கம் கூறியுள்ளது.

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் பயணங்களுக்காக வாடகைக்கு பெற்ற கார்களை அந்த நிறுவனங்களிடம் திரும்ப ஒப்படைத்து விடுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

இலங்கை வங்கியின் மூலம் வழங்கப்பட்ட பகிரங்க கடன் தவணை கடிதங்கள் கொண்டு இறக்குமதி செய்யப்பட்ட இந்த வாகனங்களை விற்பனை செய்து கடன் தொகையை செலுத்துமாறு இறக்குமதி செய்த நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க இறக்குமதி செய்யப்பட்ட 60 டிபெண்டர்கள் வாகனங்கள் இராணுவத்தினரின் தேவைகளுக்கு வழங்கப்பட உள்ளன.

டொயோட்டா ரக வான் மற்றும் கார்கள் தொடர்பில் ஓரிரு நாட்களில் ஜனாதிபதி தீர்மானங்களை எடுப்பார் என்றும் லலித் வீரதுங்க குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் 150 கோடி ரூபாவுக்கும் மேல் செலவு செய்து சுங்க வரியின்றி அரசாங்கம் இந்த வாகனங்களை இறக்குமதி செய்திருந்தாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

Web Design by Srilanka Muslims Web Team