மனவலிமை நிறைந்த பெண்கள் சிறப்பு மிக்கவர்களே ..! - Sri Lanka Muslim

மனவலிமை நிறைந்த பெண்கள் சிறப்பு மிக்கவர்களே ..!

Contributors

வருடம் தோறும் மார்ச் 8-ம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. தாயாக, தாரமாக, அக்கா தங்கையாக, மகளாக, தோழியாக நம் உறவின் அனைத்து நிலையிலும் நிறைந்திருப்பவர்கள் பெண்கள். எப்போதுமே உடலால் வலிமைமிக்க ஆண்களை விட மனவலிமை நிறைந்த பெண்கள் சிறப்பு மிக்கவர்களே.

அரசியல், சமூகசெயல்பாடுகள், பொழுதுபோக்கு, விளையாட்டு, தொழில்துறை என சகல துறைகளிலும் இன்று பெண்கள் இல்லாத இடங்களே இல்லை. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வது வெறும் பழமொழிக்காக மட்டும்மல்ல. ஆண்கள் துவண்டு போகும் நேரங்களில் தாங்கி பிடித்து நேர்மறை எண்ணங்களை ஆண்கள் மனதில் விதைத்து மீண்டும் வாழ்க்கை என்னும் பந்தயத்தில் முன்பை விட பலமடங்கு வேகத்தில் ஓட வைப்பதில் பெண்களின் பங்கு அதிகம்.

சர்வதேச மகளிர் தினமாக வருடம் தோறும் மார்ச் 8-ம் திகதி கொண்டாடினாலும் வருடம் முழுவதிலும் மகளிர் தினமாகவே நாங்கள் பார்க்கிறோம். இஸ்லாம் முதல் உலகின் எல்லா மார்க்கமும், மதமும் பெண்களை கௌரவிக்கிறது. இந்த விசேட நாளில் உலகின் ஒவ்வொரு சாதனை பெண்ணையும் கௌரவத்துடன் நினைவு கூறுகிறேன்.

சட்டத்தரணி எச். எம்.எம். ஹரீஸ் (பா.உ.)
முன்னாள் இராஜாங்க அமைச்சர்
பிரதித்தலைவர்- ஸ்ரீ.ல.மு.கா.

Web Design by Srilanka Muslims Web Team