மனிதஉரிமை மீறல்களை நிரூபிக்க வேண்டும் – ராவண பலய அமைப்பாளர்! - Sri Lanka Muslim

மனிதஉரிமை மீறல்களை நிரூபிக்க வேண்டும் – ராவண பலய அமைப்பாளர்!

Contributors

இலங்கையில் மனிதஉரி மைமீறல்கள் இடம்பெற்றதை மங்கள சமரவீர நிரூபிக்க வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார் ராவணா பலய அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ச தேரர். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கை தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராவணா பலய அமைப்பு நேற்று பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அதனையடுத்து கருத்து வெளியிட்ட ராவணா பலய அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ச தேரர், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவை விவாதத்துக்கு வருமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.

சனல் 4 மற்றும் புலம்பெயர்ந்த அமைப்புகளுக்கு பின்னால் செல்லும் மங்கள சமரவீர தேசிய தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்திற்கு வரவேண்டும். இதன்போது இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதை அவர் நிரூபிக்க வேண்டும் என்றும் சத்தாதிஸ்ச தேரர் கோரிக்கை விடுத்தார்.

Web Design by Srilanka Muslims Web Team