மனிதாபிமான உதவிகளை விளம்பரப்படுத்தாதீர்கள் » Sri Lanka Muslim

மனிதாபிமான உதவிகளை விளம்பரப்படுத்தாதீர்கள்

help

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

–    இப்னு மாஷ் –


அம்பாறையிலும், கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக முஸ்லிம் பிரதேசமெங்கும் நிவாரணங்கள் பணமாகவும் பொருளாகவும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இஸ்லாமிய சகோதரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு முஸ்லிமும் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரர்களுக்கு தங்களால் முடிந்த  உதவிகளைப் புரிவதற்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், பிரதேச ரீதியாக சேகரிக்கப்படும் நிதி மற்றும் பொருட்கள் தொடர்பில் தற்போது இணையத்தள செய்தி ஊடகங்களினூடாக விளம்பரப்படுத்தப்பட்டு வருவதைக் காண முடிகிறது. எங்களது ஊரில் 5 இலட்சம் என்றும் 10 இலட்சம் என்றும் ஊர்களால் திரட்டப்பட்ட நிதி  தொடர்பில் செய்தி ஊடகங்கள் வாயிலாக பெருமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சமயோசனையற்ற இத்தகைய விளம்பரப்படுத்தல்கள் குறித்து மீள்வாசிப்புக்குட்படுத்துவது ஒவ்வொரு விளம்பரத்தாரர்களினதும் சமூகப் பொறுப்பாகும்.

ஏனெனில், கடந்த காலங்களில்  சில விடயங்கள் தொடர்பில், தனிநபர், அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான விளம்பரப்படுத்தலுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்; இந்நாட்டிலுள்ள முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக பெரும்பான்மை சமூகத்தை விட வளர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியை இனவாதிகள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

சமூகத்தின் மத்தியில், ஒரு வேளை சோற்றுக்கு கஷ்டப்படுகின்ற மக்களும், திருமண வயது வந்தும் அவற்றை நிறைவு செய்து கொள்ள  இயலாதவர்களும், குடும்பத்தை வழிநடத்த முடியாது ஏங்கித் தவிக்கும் கணவனை இழந்த விதவைகளும், வாழ்வதற்கு வசதியற்று யாசகம் செய்து வாழ்வோரும், உறங்குவதற்கு முறையாகக் கட்டப்பட்ட இல்லங்களின்றி குடிசைகளில் வாழ்வோரும் என பொருளாதா ரீதியாக அடிமட்டத்தில் பலர் வாழ்ந்துகொண்டிருக்கையில், பிரதேச மற்றும் கொள்கைப் பெருமைக்காக பள்ளிவாசல்களைக் கட்டிவிட்டு அவற்றின் திறப்பு விழாக்களை விளம்பரப்படுத்தியமையும், பெருமைக்காகவும், சமூக அந்தஸ்த்துக்காகவும் திருமணங்களை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் மிக ஆடம்பரமாக நடாத்தியது மாத்திரமின்றி அத்திருமணங்களுக்கு பெரும்பான்மையின அரசியல்வாதிகளையும், ஏனையவர்களையும் அழைத்து தங்களது பணப்பலத்தைக் காட்டியமையும் இனவாதிகள் நம் சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வதற்கும் எமது பொருளாதாரத்தை குறிவைப்பதற்கும் காரணமாக இருந்திருப்பதை கடும்போக்காளர்களின் கருத்தாடல்கள் வெளிப்படுத்துகின்றன.

ஆதலால், நாம் செய்யும் சில விடங்கள் குறித்து மீள்வாசிப்புச் செய்ய வேண்டி காலத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். இச்சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட ரீதியாகவே அல்லது பிரதேச ரீதியாகவோ பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செய்யும் உதவிகளை எந்தவொரு நோக்கத்திற்காக வேண்டியும் அவற்றை ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தாமல் இருப்பதானது பொதுத்தளத்தில் விபரித்துக் கூற முடியாத தாக்கங்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும்; என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இந்நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்கள் மீது இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு இரு காரணங்கள் கூறப்படுகிறது. முதலாவது காரணம் முஸ்லிம்களின் பொருளாhர விருத்தி மற்றையது முஸ்லிம்களின் சனத்தொகைப் பெருக்கம்.

இவ்விரு காரணங்களின் அடிப்படையிலேயேதான் முஸ்லிம்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனை நிரூபிக்கும் பல காணொலிகளை தற்போது இத்தாக்குல்களின் சூத்திரதாரியாகக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள அமித் வீரசிங்கவின் லுழர வரடிந பதிவுகளை நோக்குகின்றபோது தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

ஆதலால், ஊர் பெருமைக்காகவும், சுயநல தனிநபர் அரசியல் விளம்பரங்களுக்காகவும் இவ்வாரான சந்தர்ப்பங்களில் புரியம்படும் உதவிகளை விளம்பரப்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்வதும். இவ்விளம்பரப்படுதல் செய்திகளை முஸ்லி;ம் ஊடகவியலாளர்கள் செய்தி ஊடகங்களுக்கு அனுப்புவதையும், இணையத்தள செய்தி ஊடங்கள் இவற்றை பதிவேற்றுவதை தவிர்ப்பதும் நமது சமூகம் மெம்மேலும் இனவாதத்தின் காழ்ப்புணர்ச்சிக்கு தீனியாக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதற்கு வழிவகுக்குமென வலியுறுத்திக் கூறுவது காலத்தின் கடப்பாடாகவுள்ளது.

‘அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர் அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும்இ அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோஇ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு; இன்னும் அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லைஇ அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்’. (2:262)

Web Design by The Design Lanka