மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் புத்தளம் வருகை - NDPF அவசர வேண்டுகோள் - Sri Lanka Muslim

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் புத்தளம் வருகை – NDPF அவசர வேண்டுகோள்

Contributors

அடிப்படை உரிமை மீறல் சம்மந்தமான விபரங்கள் சேகரிப்புவடக்கிலிருந்து 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டு பல்வேறு பிரதேசங்களில்வாழும் மக்களின் மீறப்பட்ட பல்வேறுபட்ட உரிமைகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் 05.04.2021 திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் புத்தளம் பிரதேசத்திற்கு வருகைதர உள்ளதால் காணாமலாக்கப்பட்டோர், வாக்குரிமை மீறல்கள் மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களை வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் பேரவை (NDPF) சேகரித்து வருகின்றது.

எனவே வடக்கிலிருந்து வெளியேற்ப்பட்டு பல பகுதிகளிலும் வாழும் உங்களுடைய மீறப்பட்ட, மீறப்படும் உரிமைகள் தொடர்பான தகவல்களை கீழ்வரும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

S.H.அப்துல் மத்தீன்
தலைவர்.
(NDPF)

A.M.மன்சூர்
உப தலைவர்.
அகில இலங்கை சமாதான நீதவான;
(NDPF) 0715685755

Web Design by Srilanka Muslims Web Team