மனித உரிமை பேரவையில் இலங்கை மீதான வாக்கெடுப்பு இன்று - Sri Lanka Muslim

மனித உரிமை பேரவையில் இலங்கை மீதான வாக்கெடுப்பு இன்று

Contributors

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கையின் பொறுப்பு கூறல் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்படவுள்ளது.

இதேவேளை, மனித உரிமைகள் ஆணையாளர் மிகவும் பக்க சார்பாகவே செயற்படுகின்றார் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் குற்றம் சாட்டினார்.

அனைத்து நாடுகளையும் சமமாக பார்க்க வேண்டும் என்ற கொள்கையை, ஐ.நா மனித உரிமைப் பேரவை மீறுவதாக, அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவிக்கின்றார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

புலம்பெயர் சமூகத்தின் வசமுள்ள அதிகபட்ச பலமும், ஒருங்கிணைப்பு மற்றும் பணபலம் ஆகியவற்றை பயன்படுத்தியே இலங்கைக்கெதிராக சர்வதேச நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எமது நாட்டின் மக்கள், அரசாங்கத்திற்கு எந்த வகையிலும் இது பாதிக்காது. அத்துடன் தற்போதைய அரசாங்கத்திற்கெதிராக உள்ள எதிர்ப்பாகும். இதற்கு முன் இருந்த அரசாங்கத்திற்கு பாதுகாப்பு செய்ததுடன், முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்கள். அனைத்து நாடுகளையும் சமமான முறையில் கவனிக்கப்பட வேண்டும் என்கிற கொள்கையை ஐ.நா மனித உரிமைப் பேரவை மீறுகிறது. மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைத்தல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயத்திலும் கடந்த அரசாங்கமே அதனை செய்தது. அப்போது மாகாண சபை தேர்தல் முறையை நீக்கியதுடன், வெற்றிடத்தையே ஏற்படுத்தியது.மாகாண சபையில் பெண்களின் வீதத்தை அதிகரித்தல் குறித்த சட்டவரைபு சமர்பிக்கப்பட்டு தெரிவுக்குழுவில் 35 பக்கம் அடங்கிய திருத்தம் சமர்பிக்கப்பட்டது. மூன்றாம் வாசிப்பின் பின்னர் ஒட்டுமொத்தமாக சட்டவரைபு மாற்றியமைக்கப்பட்டது. அந்த சட்டமூலத்தை நிறைவேற்றி மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம் என சட்டமா அதிபர் தெரிவித்திருந்த போதிலும் வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் இழுத்தடிப்பை செய்தது. அப்படியே அந்த சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு 16 ஆசனங்கள் இருந்தபோது அத்தனை வாக்குகளும் மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்காக ஆதரவளிக்கப்பட்டு அளிக்கப்பட்டது. நல்லாட்சியே இதனை செய்தது. நாடாளுமன்ற சம்பிரதானத்தை மீறியது. இதுகுறித்து ஜெனீவா அறிக்கையில் எந்த விமர்சனமும் காணப்படவில்லை. ஆனால் தற்போதைய அரசாங்கம் தேர்தலை ஒத்திவைப்பதாக ஜெனீவா அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team