மனித உரிமை பேரவை நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் சூழ்நிலை..! - Sri Lanka Muslim

மனித உரிமை பேரவை நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் சூழ்நிலை..!

Contributors

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் உரை குறித்த விவாதத்தின் போது இலங்கைக்கு ஆதரவாக பல நாடுகள் கருத்து வெளியிட்டன ஆனால் வாக்கெடுப்பு என வரும்போது நிலைமை வேறுவிதமாக காணப்படலாம் என இலங்கையின் வெளிவிவகார செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

வலிமைவாயந்த நாடுகள் அச்சுறுத்துவதுடன் உறுப்பு நாடுகள் அவர்களிற்கு அச்சப்படும் நிலைமை உருவாக்குவது வழமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருப்பதற்காக நிதி மற்றும் கடன்களை வழங்குவதாக அவர்கள் உறுதிவழங்கலாம் எனவும் வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்காமலிருந்தால் அந்த நாடுகளின் மனித உரிமை நிலவரம் குறித்து மௌனத்தை கடைபிடிப்பதாக வலிமைவாய்ந்த நாடுகள் தெரிவிக்கலாம்,என தெரிவித்துள்ள ஜயனத் கொலம்பகே இதன் காரணமாக ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை முற்றிலும் மேற்குலக அமைப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது முதல்நாளே புலனானது 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ள அவர் ஆனால் ஒரு மேற்குலக நாடு கூட இலங்கைக்காக குரல்கொடுக்கவில்லைஎனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக குரல்கொடுத்த 15 நாடுகளில் சொலமன் தீவை தவிர ஏனைய அனைத்தும் மேற்குலக நாடுகள் – சொலமன் தீவு அமெரிக்காவின் பழைய காலனி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team