மன்னாரிலிருந்து ஆசிய உதைப்பந்தாட்ட போட்டியில் விளையாட தெரவு செய்யப்பட்ட வீரர்களுக்கு அமைச்சர் றிசாட் பாராட்டு - Sri Lanka Muslim

மன்னாரிலிருந்து ஆசிய உதைப்பந்தாட்ட போட்டியில் விளையாட தெரவு செய்யப்பட்ட வீரர்களுக்கு அமைச்சர் றிசாட் பாராட்டு

Contributors

– இர்ஷாத் றஹ்மத்துல்லா –

தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய உதைப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு மன்னாரில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கத்தினால் 41ஆவது ஆசிய உதைபந்தாட்ட போட்டிக்காக இலங்கை 19 வயது தேசிய உதைபந்தாட்ட அணியானது நவம்பர் மாதம் 6ஆம் திகதி தாய்லாந்து சென்று 16 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர். மன்னாரில் வைத்து அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்த புனித சவேரியர் ஆண்கள் கல்லுாரி மாணவன் ஜே.யோண்சன் தமது பயணம் குறித்து அமைச்சரிடத்தில் கூறினார்.

அதே வேளை அமைச்சர் றிசாத் பதியுதீன் கருத்துரைத்த போது – எமது மாட்டம் சர்வதேச ரீதியில் இன்று விளையாட்டு துறையில் தடம் பதித்துள்ளதாகவும்,எதிர் காலத்தில் இன்னும் பல சாதனைகளை மாணவர்கள் ஆற்ற வேண்டும் என்றும்,மாணவர்கள் தமது கல்வி இலட்சியத்துடன் மட்டும் நோக்காக கொண்டு செயற்படுவதன் மூலம் தத்தமமு பெற்றோர்களுக்கும் மாவட்டத்துக்கும்,தேசத்துக்கும் உதவி செய்ய முடியும் என்றும் கூறினார்.

அதே வேளை எதிர்காலத்தில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு மேலும் புத்துாக்கம் அளிக்கும் திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் அங்கு கூறியமை குறிப்பிடத்தக்கது.

6s6

Web Design by Srilanka Muslims Web Team