மன்னாரில் கொரோனாவினால் 11 பேர் பலி..! - Sri Lanka Muslim
Contributors

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

நேற்றைய (14) தினம் சனிக்கிழமை (14) காலை மேலும் ஒரு கொரோனா மரணம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 9ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட மன்னார் கீரி பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய வயோதிபர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக சனிக்கிழமை (14) காலை உயிரிழந்தார்.

அவருக்கு ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். மேலும் மன்னார் மாவட்டத்தில் கடந்த 1 ஆம் திகதி தொடக்கம் வெள்ளிக்கிழமை (13) வரையிலான 13 நாட்களில் 220 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் மாத்திரம் 1,244 கொரோனா தொற்றாளர்களும், மாவட்டத்தில் மொத்தமாக 1,261 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Web Design by Srilanka Muslims Web Team