மன்னார் முசலி பிரதேச வீதியின் அவல நிலை - Sri Lanka Muslim

மன்னார் முசலி பிரதேச வீதியின் அவல நிலை

Contributors

qou58

-நஸீப் முஹம்மட்-

யுத்ததின் பின்பு மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் முஸ்லிம்கள் தங்களின் தாயக புமியில் மீள்குடியேறினார்கள் அந்த வகையில் புநொச்சிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள மணற்குளம் கிராம மக்கள் 2004 ஆம் ஆண்டு முசலி பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் கிராமங்களை விட முதலாவது மிள்குடியேறினர்.

 

அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சர் றிசாட் பதீயுதின் வேண்டுகோளின் பேரில் 51 வீடுகளுடன் மீள்குடியேறிய கிராமமாக மணற்குள கிராமம் காணப்படுகின்றது .இருந்தும் கிராமத்தின் உள்ளக வீதிகள் இன்னும் திருத்த படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் மழைகாலங்களில் பாடசாலை மாணவர்கள்.முதியோர்கள் மற்றும் கற்பிணி தாய்மார்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கடந்த மாதம் முசலி பிரதேச சபை உறுப்பிர்களுக்கு குறிப்பட்ட அமைச்சினால் பொது வேலைக்கு நிதி ஒதுக்கப்பட்டது இந்த நிதி 7 பிரதேச உறுப்பினர்கள் தங்களின் சொந்த கிராமங்கஞக்கு ஒதிக்கப்பட்டதாக ஒரு சில உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

முசலி பிரதேசத்தில் மீதியாக உள்ள பல கிராமங்கஞக்கு பொது வேலைகள் இடம்பெறாமல் மக்கள் அவஸ்தையில் திண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும்.

 

மணற்குளம் கிராமத்தின் உள்ளக வீதியினை புணர்நிர்மாணம் செய்ய முசலி பிரதேச சபை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் யாராவது நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் தினமும் எதிர்பார்த்து கொண்டு இருப்பது மிக கவலையடையவுள்ளதாக உள்ளது .

 

இதனை கருத்திற் கொண்டு மக்கள் தனது அன்றாட தேவைகளை மேற்கொள்வதில் மிகவும் கக்ஷ்ட்டப்படுகின்றனர்.

இதில் சம்பத்தப்பட்ட அரசியல்வாதி இதனை அவரது கவனத்திற்கொள்வாரா என மக்கள் தினமும் ஏங்கி கொண்டு இருக்கின்றனர்……..ஆகவே இதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதி இதில் தயவுடன் கவனம் எடுக்குமாறு வேண்டிகொள்கிறோம். என மக்கள் விசனம்

mu1 mu2 mu3

Web Design by Srilanka Muslims Web Team