மன்னிக்கவோ மறக்கவோ முடியாது » Sri Lanka Muslim

மன்னிக்கவோ மறக்கவோ முடியாது

kka

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஹுஸைனியாபுர அ(z)ஸ்ஹான் ஹனீபா, அகமட் எஸ். முகைடீன்


தனது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும் எனும் கொள்கையில் நீ போராடியது ஓரளவு நியாயமாக இருப்பினும் ஏனைய இனத்தை அழித்த உன்னை ஒருபொழுதும் மன்னிக்கவோ மறக்கவோ முடியாது

இலங்கையின் வடக்கில் நிம்மதியாக வாழ்ந்த முஸ்லிம் மக்களை அங்கிருந்து ஒரே நாளில் எவ்வித ஈன இரக்கமுமின்றி இடம்பெயருமாறு ஆணையிட்டு பயமுறுத்தி உடமைகளையும் சொத்துக்களையும் அபகரித்து ஆக்கிரமித்து கொள்ளையடித்து அகதிகள் என்ற நாமத்திற்குரியவர்களாக ஆக்கிய உன்னை எவ்வாறு மன்னிக்கவோ மறக்கவோ முடியும்?

தொன்னூறில் அகதிகளான முஸ்லிம்கள் இருப்பத்தாறு வருடங்கள் கழிந்தும் இன்றுவரை மீண்டெழமுடியாத வண்ணம் பொருளாதாரத்தில் பின்னடைவுக்கு காரணமான உன்னை ஒருபோதும் மன்னிக்கவோ மறக்கவோ முடியாது. தனது இனம் என்ற சுயநலம் கொண்ட கோஷத்தில் ஏனைய இனத்தை அழித்து அவர்களது துன்பத்தில் இன்பம் கண்ட உன்னை வரலாறு ஒருக்காலும் மன்னிக்கமாட்டாது.

கிழக்கிலிருந்து புனித ஹஜ்ஜுக்குச் சென்ற முஸ்லிம்களை இடைநடுவில் தடுத்து பாரிய குழி தோன்றி அனைவரையும் அதற்குள் அமர்த்தி இரக்க அகராதியற்று அரக்கம் கொண்டு குண்டுகள் போட்டு கொலைசெய்து முஸ்லிம்களை அழித்து சோக வரலாற்றை பதித்த உன்னை எவ்வாறு மன்னிக்கவோ மறக்கவோ முடியும்?
காத்தான்குடி பள்ளிவாயலில் இறைவனை சிரம்பணிந்துகொண்டிருந்த முஸ்லிம்களை இரக்கமற்று துப்பாக்கியால் சரமாறியாக சுட்டு வீழ்த்திய உன்னை எவ்வாறு மன்னிக்கவோ மறக்கவோ முடியும்?.

ஈழம் என்ற பெயரில் இட ஆக்கிரமிப்பில் பேரவா கொண்டு வடக்கிலிருந்து முஸ்லிம்களை சுத்திகரிப்பு செய்தது போதாதென்று கிழக்கிலும் உனது சுயநல திட்டத்தை அமுல்படுத்த பரவலாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் மூதூரை துப்பாக்கி,ஏவுகணை,குண்டுகள் என்ற பேராயுதங்களால் ஆக்கிரமித்து உயிர்களை சற்றேனும் பொருட்படுத்தாது கொன்றொழித்து முஸ்லிம்களது சடலங்களின் மீது ஆட்சிசெய்ய முனைந்த உன்னை எவ்வாறு மன்னிக்கவோ மறக்கவோ முடியும்?

இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் ஈழம் என்று உன்னை ஒரு சாரார் போற்றினாலும், ஈழப்போர்வையில் நீ செய்த அக்கிரமங்களையும் ஈனச்செயற்களையும் அறிந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையர்கள் என்றவகையில் முஸ்லிம்கள் உன்னை ஒருபோதும் மன்னிக்கவோ மறக்கவோமாட்டார்கள்.

மொத்தத்தில் முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்கு கங்கணம் கட்டி வெறிபிடித்து திரிந்த உன்னை மன்னிப்பது மறப்பதென்பது அசாத்தியமற்றதாகும்.

Web Design by The Design Lanka