மன்மோகனின் முடிவு எமக்கு தோல்வியல்ல: அரசு - Sri Lanka Muslim

மன்மோகனின் முடிவு எமக்கு தோல்வியல்ல: அரசு

Contributors

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர்  மன்மோகன் சிங் கலந்துகொள்ளாதது எமக்கு தோல்வியல்ல என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

உள்நாட்டு அரசியல் காரணங்களினாலேயே கொழும்பில் நடக்கும் மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்ளாதிருக்க முடிவுசெய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

‘மன்மோகன் சிங் வராமல் இருக்க முடிவு செய்திருப்பது எங்களின் மாநாட்டின் வெற்றியைப் பாதிக்காது. அதனை நாங்கள் ஒரு பிரச்சனையாகக் கருதவில்லை’ என்றும் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

‘அவரது முடிவு எங்களுக்கு தோல்வி அல்ல, நாங்கள் அவரை அழைத்தோம், அவர் வந்திருந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருப்போம்’ என்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். (பிபிசி)

Web Design by Srilanka Muslims Web Team