மன்மோகனும் - நவாஸ் ஷெரீப் கொழும்பில் சந்திக்கும் வாய்ப்பு: பாகிஸ்தான் செய்திதாள் - Sri Lanka Muslim

மன்மோகனும் – நவாஸ் ஷெரீப் கொழும்பில் சந்திக்கும் வாய்ப்பு: பாகிஸ்தான் செய்திதாள் –

Contributors

இந்திய பிரதமர் மன்மோகன்சிங் – பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆகியோருக்கிடையில்
கொழும்பில் சந்திப்பு இடம்பெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாக பாகிஸ்தானின் செய்திதாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது .
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது , இந்திய பிரதமர் மன்மோகன்சிங் – பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆகியோர் தனியான சந்திப்பை நடத்தலாம் என பிஸ்னஸ் ரெக்கோடர் என்ற இந்த செய்திதாள் குறிப்பிட்டுள்ளது .
இந்த சந்திப்பு இடம்பெறுமானால் இரண்டு நாட்டு பிரதமர்களுக்கும் இடையில் இரண்டு மாதங்களுக்குள் நடக்கும் இரண்டாவது சந்திப்பாக இது அமையும் என்று பிஸ்னஸ் ரெக்கோடர் குறிப்பிட்டுள்ளது .
எனினும் இந்திய பிரதமர் கொழும்பு மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் இன்னும் தெளிவான செய்தி வெளியாகவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .(ttn)

Web Design by Srilanka Muslims Web Team