மன்மோகன்சிங் வராததால், இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படாது : ஜெயசூர்யா - Sri Lanka Muslim

மன்மோகன்சிங் வராததால், இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படாது : ஜெயசூர்யா

Contributors

இந்தியா நீண்டகாலமாக இலங்கையின் நட்பு நாடாக உள்ளது என அந்நாட்டு தபால் துறை இணை அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

விளையாட்டு நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்க திருவனந்தபுரம் வந்திருந்த ஜெயசூர்யா செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் மன்மோகன்சிங் வருகை புரியாததால் இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு விட்டதாக அர்த்தம் இல்லை. இந்தியா எப்போதுமே இலங்கையின் நட்பு நாடு தான்.

காமன்வெல்த் மாநாட்டிற்கு வராமல் இருந்தது ஒரு நாட்டு தலைவரின் தனிப்பட்ட முடிவு. அப்படிப் பார்த்தால் இதற்கு முன்னர் பெர்த் நக்ரில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டடைக் கூட இந்தியப் பிரதமர் புறக்கணித்துள்ளார் என்றார்.

மேலும், 2009-ல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி கட்டப் போரின் போது மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணை செய்ய வேண்டும் என்ற பிரிட்டன் அரசின் கோரிக்கை ஏற்புடையது அல்ல என தெரிவித்தார்.

இலங்கை ஒரு சுதந்திர நாடு. அதற்கு என தனி இறையாண்மையும், சட்ட திட்டங்களும் உள்ளன. எனவே போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை தேவையில்லை என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team