மரணத்தைக் கீறும் பேனா புத்தக வெளியீட்டு விழா நிகழ்வு » Sri Lanka Muslim

மரணத்தைக் கீறும் பேனா புத்தக வெளியீட்டு விழா நிகழ்வு

b

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-முஹம்மட் அப்லால் அபுல்லைஸ்-


மரணத்தைக் கீறும் பேனா எனும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்வு சிரேஷ்ட சட்டத்தரணியும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ ஆரிப் சம்சுதீன் அவர்களின் தலைமையில் அல்- இப்னூ சீனா வித்தியாலயத்தில் இடம்பெற்றது…

தடாகம் கலை இலக்கியத்தின் பிரமாண்டமான வெளியீடான பாலமுனை முபீத் அவர்களின் மரணத்தைக் கீறும் பேனா எனும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது…

இந்நிகழ்வானது மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஆரிப் சம்சுதீன் அவர்களது தகப்பனாரான மறைந்த கல்முனையின் பிரபல்யமான மிகச்சிறந்த வழக்கறிஞ்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மர்ஹூம் AM.சம்சுதீன் அவர்களின் பெயரில் நூலாசிரியர் முபீத் அவர்களால் சமர்ப்பனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது…

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் சட்ட முதுமானியுமான அல்-ஹாஜ் அப்துல் ரவூப் ஹக்கீம் அவர்களும், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ALM. நசீர், மாகாணசபை உறுப்பினர் AL .தவம். முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் அன்சில், பழில் BA , கலைஞ்சர்கள் தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்…

இந்நிகழ்வில் பிரதம அதிதி மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கும் நூலாசிரயரால் நூல் வழங்கிவைக்கப்பட்டது.

 b-jpg2

Web Design by The Design Lanka