மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பிரான்ஸ் இலங்கையிடம் கோரிக்கை - Sri Lanka Muslim

மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பிரான்ஸ் இலங்கையிடம் கோரிக்கை

Contributors

மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பிரான்ஸ், இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மரண தண்டனை விதித்தலை ரத்து செய்ய வேண்டுமென பிரான்ஸ் அரசாங்கம் கோரியுள்ளது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜேன் போல் மொனாச்சுவிற்கும், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழிமுறையை இலங்கை பின்பற்ற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும் என ஹக்கீம் தெரிவித்துள்ளார். வெற்றிகரமான முறையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை நடாத்தியமைக்கு பிரான்ஸ் தூதுவர், இலங்கை அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team