மரண விசாரணை அதிகாரிகளுக்கு விசேட பயிற்சி - Sri Lanka Muslim

மரண விசாரணை அதிகாரிகளுக்கு விசேட பயிற்சி

Contributors

-அஸ்ரப் ஏ சமத்-

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் 200 க்கும் மேற்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரிகள், மற்றும் சட்ட வைத்தியர்களுக்கான  மரண விசாரணைகள் மற்றும் சட்டநுனுக்கங்கள்  மருத்துவ அறிக்கை

பற்றிய டிப்ளோமா பயிற்சி நெறி ஒன்று இன்று  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு நீதி அமைச்சா; ரவுப் ஹக்கிமும் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ஹிரிம்புருகம மற்றும் மருத்துவ பீட பேராசிரியர் ரவீந்திர பெணான்டோ ஆகியோர் தலைமையில்  (30) சனிக்கிழமை  பொரலையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப் பயிற்ச்சி நெறிஒரு வருட தொலைக்கல்வி டிப்ளோமா பாடநெறியாக பயிற்றுவிக்கப்படுகின்றது. மரண விசாரணை மற்றும் நீதிமன்ற வழக்குகளில் மரணங்களில் ஏற்படும் சட்டங்கள், வைத்திய பரிசோதனை அறிக்கைகள் இராசயண பகுப்பாய்வுகள் பற்றிய அறிவுகளை மேம்படுத்துவதே  இப் பயிற்சி நெறியின் நோக்கமாகும்.

அமைச்சர் ரவுப் ஹக்கீம் இங்கு உரையாற்றுகையில் – இப் பயிற்ச்சி நெறியை அடுத்த வரும் காலங்களில்  இலவசமாக பயில்வதற்காக அடுத்து வருடம் வரவு செலவுத் திட்டத்தில் திரைசேரி அதிகாரிகளுடன் பேசி நிதி ஒதுக்கித் தருவதாக தெரிவித்தார்.lm

judicial inquary2

 

judicial inquary3

Web Design by Srilanka Muslims Web Team