"மரம் வளர்ப்போம் அனர்த்தம் குறைப்போம்" - சம்மாந்துறையில் ஆரம்பம்..! - Sri Lanka Muslim

“மரம் வளர்ப்போம் அனர்த்தம் குறைப்போம்” – சம்மாந்துறையில் ஆரம்பம்..!

Contributors

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பசுமை இலங்கை “ஒரு நபர் – ஒரு மரக்கன்று” எனும்  அரசின் மர நடுகை திட்டத்தினையொட்டி சம்மாந்துறை பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் பிரிவினால் “மரம் வளர்ப்போம் அனர்த்தம் குறைப்போம்” எனும் தொனிப்பொருளில் தொடர்ச்சியான மர நடுகை திட்டம் நேற்று (06) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன் நிகழ்வில்  சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா , உதவி பிரதேச செயலாளர் யும்.எம். அஸ்லம்,  சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் யு.எல். சலீம், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களான எம்.எஸ்.எம். அஸாறுடீன், எம்.எ.எம் . நபீஸ் மற்றும் பிரிவுக்குப் பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டனர்.

அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்படும் போது குறித்த நிவாரணக் கொடுப்பனவினை மக்களின் காலடிக்கே சென்று வழங்குவதோடு  மரக்கன்று ஒன்றினையும் நாட்டுவதே இத் திட்டத்தின் நோக்கமாகும். இத் திட்டத்தின் மூலம் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் அனர்த்தங்களை குறைத்தல் போன்றன எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Web Design by Srilanka Muslims Web Team