மருதமுனையில்“உபாக்கியான அந்தாதி செய்யுள்”நூல்வெளியீடு » Sri Lanka Muslim

மருதமுனையில்“உபாக்கியான அந்தாதி செய்யுள்”நூல்வெளியீடு

1-PMMA CADER-12-05-2018

Contributors
author image

P.M.M.A.காதர்

மருதமுனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் புலவர் மர்ஹூம் யூ.எம்.இஸ்மாயில் மரைக்கார் எழுதி 1939 ஆண்டு வெளியிட்ட ‘உபாக்கியான அந்தாதி செய்யுள்’ நூலை நூலாசிரியரின் புதல்வர் ஐ.எம்.வதுறுல் பௌஸ் மீள்பதிப்புச் செய்து வெளியிட்ட நிகழ்வு சனிக்கிழமை மாலை(12-05-2018)மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன் தலைமையில் விழா நடைபெற்றது.கவிஞர் எம்.எம்.விஜிலி தொடக்கவுரை நிகழ்த்தினார்.நூல் அறிமுகவுரையை பேராசிரியர் பி.எம்.ஜமாஹிர் நிகழ்த்தினார் நூலுரையை பேராசிரியர் றமீஸ் அப்துல்லா நிகழ்த்தினார்.நூலின் முதற் பிரதியை சறோ நிறுனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.தாஜூதீன் பெற்றுக்கொண்டார்.

நினைவுப் பிரதியை நூ}லாசிரியர் புலவர் மர்ஹூம் யூ.எம்.இஸ்மாயிலின் மனைவி உம்மு ஜெஸீமா பெற்றுக் கொண்டார் அறிவிப்பாளர் ஏ.எம்.நஸ்றுத்தீன் நிகழ்வைத் தொகுத்த வழங்கினார்

தலைமையுரை கலாநிதி அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன்
இலங்கை மண்ணுடனான முஸ்லிம்களின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் கொண்ட தொன்மை உடையதாயினும் அவ்வரலாற்றுப் பாரம்பரியத்தை நிறுவுவதில் முஸ்லிம்கள் பல சவால்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.முஸ்லிம்களின் வரலாற்று ஆவணங்களை பாதுகாப்பதில் முஸ்லிம்கள் விட்டதவறே இதற்குக்காரணமாகும்.

மருதமுனை மண்ணுக்கும்,தமிழ் இலக்கியத்திற்கும் பல நூறு வரலாற்றுத் தொடர்புண்டு நாம் அறிந்த வகையில் சின்னாலிமப்பாவில் இருந்து தொடங்கிய இலக்கியப்பாரம்பரியப் பயணம் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன்,இந்த நூலின் ஆசிரியர் இஸ்மாயில் மiரைக்கார் ஆகியோரின் ஊடாக பல இலக்கிய வாதிகளைக் கொண்டு பயணிக்கின்றது இவ்வாறான இலக்கியப் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்படவேண்டும்

நூல் அறிமுகவுரை பேராசிரியர் பி.எம்.ஜமாஹிர்
மருதமுனையின் இன்றைய கல்வி அறுவடைக்கு அன்று வித்திட்ட மூத்த அசிரியர்களில் ஒருவரான பெரிய வாத்தியார் என அழைக்கப்பட்ட தலைமை ஆசிரியர் மர்ஹூம் யூ.எல்.இஸ்மாயில் மரைக்கார் அவர்களால் எழுதப்பட்டு 1939 ஆண்டு 42 பக்கங்களுடன் 1000 பிரதிகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட இஸ்லாமிய செய்யுள் இலக்கியமான ‘உபாக்கியான அந்தாதி’கவிஞரின் இஸ்லாமிய நம்பிக்கை மற்றும் வரலாறு பற்றிய அறிவைப் பதிவு செய்திருக்கின்றது.

உபாக்கியானம் என்பது ஒரு கிளைக் கதையை குறிக்கும் சொல்லாகும் அதாவது முற்கால சம்பவம் ஒன்றை எடுத்துரைக்கும் ஒரு முறையாகும்.மாறாக அந்தாதி என்பது முதல் செய்யுளின் இறுதிச்சொல்லை அடுத்து வரும் செய்யுளின் முதல் சொல்லாகக் கொண்டு அமைந்த பாடல் புனைவைக் குறிக்கும் ஆக உபாக்கியானம் அந்தாதி எனும் இரண்டையும் இணைத்து அவற்றின் இலக்கிய நயம் மாறாமல் முகம்மது நபி அவர்களின் காலத்தில் நடந்த சம்பவம் ஒன்றை(வேடனும் முயலும்)உபாக்கியான அந்தாதி வெளிப்படுத்துகின்றது.

அன்றைய அறிஞர்களால் போற்றப்பட்ட இம் முறையைப் பின்பற்றி இஸ்லாமிய சட்டவரையறைக்குள் நின்று உலமாக்களின் அவதானத்தைப் பெற்று மிகப் பொறுமையுடன் கருத்துரைக்கும் கவிஞரின் புலமை கவனத்தில் கொள்ளத் தக்கது.இந்நூல் இருபிரிவுகளையுடையது அவற்றுள் முந்தியது உபாக்கியான அந்தாதியெனவும் மற்றையது தோத்திரக் கீர்த்தனாமிர்தம்மெனவும் நாமம் பெற்றுள்ளன.

உபாக்கியான அந்தாதி
இது உலகத்தில் உள்ள அனைத்துக்கும்(மனிதனுக்க மட்டுமல்லாமல்) அருட்கொடையாக(ரஹ்மத்தாக) அனுப்பப்பட்டஇறைவனின் தூதர் முஹம்மது நபியவர்களின் காலத்தில் நடந்த ஓர் சரித்திரத்தை 111 பாடல்களாகப் பாடப்பட்டுள்ளது.

தோத்திரக் கீர்த்தனாமிர்தம்
இது இருபது கீர்த்தனங்களாற் பாடப்பட்டு இருப்பதும் கவனத்திற்குரியது இவை இசையின் வழியே சமய சரித்திரங்களை கற்பிக்க முயன்றுள்ளதை பதிவு செய்கின்றது.

இந்த நூலின் செய்யுள்ளகளை சந்தி பிரித்து பொழிப்புரையுடன் வெளியிட்டிருக்கலாம் அறிவார்ந்த உண்மையை அறிவதற்கான முயற்சிகள் பயனுடையதே எனினும் ஏ.எம்.ஏ.சமது அதிபரின் நூலாய்வு செய்யுள் சந்தி பிரிக்கும் தேவையை ஓரளவு நிறைவு செய்துள்ளதும் பாராட்டத்தக்கது.

இந்த செய்யுள் நூலைவிடவும் நூ}லாசிரியர் முஹிம்மாத்துல் முஸ்லிமீன்,முகம்மமு நபி அவர்களின் பல தார மணத்தின் காரணங்கள் அகிய இரு நூல்களையும் பல தனிப்பாடல்களையும்,கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளதும் அறியத்தக்கதாகும்.இந்த செய்யுளை நூலாசிரியரின் இளைய மகன் பதுறுல் பவுஸ் 80 ஆண்டுகளுக்குப் பின்னர் மீள்பதிப்புச் செய்து தனது தந்தையை நினைவு கூறுவது மனமகிழ்ச்சியை தருவதோடு அவரது இந்தப் பணியை இஸ்லாமிய தமிழ் இலக்கிய உலகம் ஊக்குவித்து பாராட்டி கௌரவிக்க வேண்டும்.

எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு(குறள் 423)
பதிப்பாசிரியரின் ஏற்புரை எனது தந்தையின் பொக்கிஷமாக இருந்து வந்த உபாக்கியான அந்தாதி நூலானது அவரோடு அழிந்து விடாமல் எதிர்கால சந்ததியினருக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கில் அவரது புதல்வர் என்ற வகையில் என்பது ஆண்டுகள் கடந்த நிலையில் எனது தந்தையின் நூலை உயிர்ப்பித்திருக்கின்றேன்.பாடசாலை எனது தந்தை சமூகத்தில் அதிபர் என்ற நாமத்தோடு நின்று விடாமல் இலக்கியம்.மார்க்கம் என்பவற்ற்pலும் தனது அடையாளத்தைப் பதித்திருக்கின்றார்.

இந்த நூலை எப்படியும் வெளிக்கொண்டுவா வேண்டும் என்ற உந்துதலினால் பல தேடல்களையும்,பிரயத்தனங்களையும் மேற்கொண்டு இந்த அளவில் இந்த நூலை மக்கள் முன்சமர்ப்பித்திருக்கின்றேன்.கல்விமான்களினதும்,பேராசிரியர்களினதும் உரைகளையும், அபிப்பிராயங்களையும் கேட்கின்றபோது இந்த நூலின் பெறுமானம் இப்போதுதான் எனக்குப்புரிகின்றது.எனவே பல்கலைக்கழக மட்டத்திலும், பாடசாலைகள் மட்டத்திலும் இந்த நூலை அறிமுகப்படுத்த வேண்டியது கல்வியலாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

இந்த நூலை மீள்பதிப்புச் செய்வதற்கு யார் யாரெல்லாம் பக்கபலமாக இருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
.

Web Design by The Design Lanka