மருதமுனையைச் சேர்ந்த இப்றாகீம் விருது வழங்கி கௌரவிப்பு » Sri Lanka Muslim

மருதமுனையைச் சேர்ந்த இப்றாகீம் விருது வழங்கி கௌரவிப்பு

i99

Contributors
author image

P.M.M.A.காதர்

தனது வாழ்நாளை உதைபந்தாட்டத்திற்காக அர்ப்பணித்த மருதமுனையைச் சேர்ந்த ஏ.எம்.இப்றாகீம்(மெரிகோல்ட்)அவர்களின் சேவையை கௌரவித்து மருதமுனை மருதம் விளையாட்டுக் கழகம் அவரை வாழ்த்தி; விருது வழங்கி கௌரவித்த நிகழ்வு அண்மையில் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டுத் தொகுதியில் கழகத்தின் தலைவர் எம்.ஏ.எம்.முஸ்தாக் அபூபக்கர் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக்,கௌரவ அதிதியாக சறோ பாம் பிறைவெட் லிமிட்டட் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.எம்.தாஜூதீன் ஆகியோருடன் கழகத்தின் தலைவர் எம்.ஏ.எம்.முஸ்தாக் அபூபக்கர், முகாமையாளர் ஏ,எச்.எம்.பாரிஸ், செயலாளர் ஏ.மனாஸ் ஆகியோரும் இணைந்து இவருக்கான விருதை வழங்கி கௌரவித்தனர்.

மெரி கோல்ட் என செல்லமாக அழைக்கப்படும் எ.எம்.இப்றாகீம் 1955.09.26ஆம்; திகதி மருதமுனையில் பிறந்தவர்;.தனது ஆரம்பக் கல்வியை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் கற்று இடைநிலைக் கல்வி மற்றும் உயர்தர கல்வி என்பவற்றை முறையே அல்-மனார்,உவெஸ்லி உயர்தரப் பாடசாலை மற்றும் கார்மேல் பாத்திமாக்கல்லூரி என்பவற்றில் கற்றார்.

தனது 15 வயதிலேயே உதைபந்தாட்டத்தில் மோகம் கொண்ட இப்றாகீம் 1970 தொடக்கம் 1974 வரையான காலப்பகுதியில் கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி அணிக்காக தனது முழுத்திறமையையும் பிரயோகித்து விளையாடினார்;.1973ஆம் ஆண்டு; கிழக்கு மாகாண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிக்கு பாடசாலை சார்பாக பிரதிநிதித்துவப படுத்தி சம்பியனாக வெற்றியும் பெற்றுக்கொடுத்தார்.

1975ஆம் ஆண்டு காலப்பகுதியில் அம்பாரை மாவட்ட அணியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்று 1993ஆம் ஆண்டுவரை அவரது திறமையின் மூலம் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார்.அக்காலகட்டத்திலேயே அவர் 1982 இல் மருதமுனையில் புகழ்பூத்திருந்த ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகத்தில் இணைந்து கொண்டார்.ஈஸ்டன் யூத் கழகத்தின் பொதுச்செயலாளர் பதவியை 1985அம் ஆண்டு முதல்; 2016ஆம் ஆண்டு வரை தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து சுமார் 31 வருடங்கள்; சேவையாற்றினார்.

விளையாட்டில் மாத்திரமின்றி நடுவர் பரீட்சை தரம் மூன்றில் 1976ஆம் ஆண்டிலும், தரம் இரண்டு பரீட்சையில் 1978ஆம் ஆண்டிலும்,சித்தியடைந்தார். மேற்கு ஜேர்மனியின் பயிற்றுவிப்பாளர் ஆச.Pயிந வினால் வழங்கப்பட்ட உதைபந்துப் பயிற்சி நெறியில் 1979அம் ஆண்டில் கலந்து கொண்டார். இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட மேலதிக உதைபந்தாட்ட பயிற்சி நெறி முகாமில் 1987ஆம் ஆண்டில் கலந்து கொண்டார்.

1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மலேசியாவில் இடம்பெற்ற உதைபந்தாட்;;ட நிருவகிப்பு தொடர்பிலான வதிவிடப் பயிற்சி நெறியில் கலந்து சிறப்பித்தார். 1996ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் னுழாய ஞயவயச ரில் நடைபெற்ற 1998ஆம்; ஆண்டுக்கான உலகக் கோப்பை காற்பந்து தெரிவுப் போட்டியின் போது இலங்கை தேசிய அணியின் உதவி முகாமையாளராக கடமையாற்றினார்.

1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08ஆம் திகதி; இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட நடுவன மதிப்பீட்டாளர் மற்றும் போட்டி ஒழுங்கமைப்பு ஆணையாளர்களுக்கான பயிற்சிப்பாசறையில் மருதமுனை சார்பாகக் கலந்து கொண்ட ஒரே மகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அம்பாரை மட்டகளப்பு பிராந்திய அணிகளின் இணைப்பாளராகவும் 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரை பதவிவகித்தார். இது மாத்திரமின்றி அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக 1994ஆம் ஆண்டில் இருந்து 2011ஆம் ஆண்டுவரை கடமையாற்றி மீண்டும் 2015ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அப்பதவியை வகுத்து வருகின்றார்.
2009ஆம் ஆண்டு ஓகஸ்ட மாதம்; 5ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற குஐகுயு குரவரசழ-3ல் நிருவாக முகாமையாளராகவும் செயற்பட்டார்.
மேலும் 2013ஆம் ஆண்டு காலப்பகுதி முழுவதும் இலங்கை கால்;பந்தாட்ட ளுழஉஉநச ஆயளவநசயுளளழஉயைவழைnநுஒஉழ உறுப்பினராகவும் மசூர்மௌலானா விளையாட்டுத் தொகுதியின் முகாமையாளராகவும் தற்போது பதவி வகித்துக் கொண்டிருக்கிறார்.

மருதமுனை கண்டெடுத்த உதைபந்து மாணிக்கமான மெரிகோல்ட் உதைபந்து மாத்திரமின்றி பல்வேறு துறைவிற்பன்னராக இருந்தமையும் அவரின் வரலாற்றுப் பக்கங்களை புரட்டும்போது தெரிகின்றது. 1973 காலப்பகுதியில் மாகாணமட்ட ஓட்டப் போட்டியில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 100ஆஇ400ஆ போட்டிகளில் முதல் இடத்தையும் ஈஸ்ட் லங்கா றிலே போட்டிகளில் 1973ஆம் ஆண்டு தொடக்கம் 1979ஆம் ஆண்டு காலம் வரையிலும் கலந்து சிறப்பித்துள்ளார்.

தனது அரச தொழிலானா எழுதுவினைஞர் தொழிலை 1980ஆம் ஆண்டு தொடக்கம் 1999ஆம் ஆண்டு வரை தேசிய கடதாசிக் கூட்டுத்தாபத்தில் பணிபுரிந்து வந்தார். விளையாட்டில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டமையால் இத்தொழிலை விட்டு விட்டு தான் நேசித்த உதைபந்தாட்டத்துறையை மருதமுனையில் மாத்திரமின்றி முழு அம்பாரை பிராந்தியத்திலும் தூக்கி நிறுத்திய பெருமை இவரையே சாரும்.

இவ்வாறு தனது வாழ்நாளை உதைபந்தாட்டத்திற்காக அர்ப்பணித்த மருதமுனை மண்ணைச்சேர்ந்த ஏ.எம்.இப்றாகீம்(மெரிகோல்ட்);;அவர்களை மருதம் விளையாட்டுக் கழகம் விருது வழங்கி பாரட்டி கௌரவித்திருப்பது அம்பாறை மாட்டத்தில் இருக்கின்ற மூத்த கழகங்களுக்கு ஒரு முன்னுதாரணமாகும் ஒருவர் வாழும் போதே வாழ்த்துவதுதான் நல்ல வாழ்த்துக்குரிய கௌரவமாகும்.

i.jpg2 i.jpg2.jpg3 i.jpg2.jpg3.jpg8 i.jpg2.jpg6 i.jpg2.jpg7 i.jpg2.jpg9 i.jpg2.jpg99 i99

Web Design by The Design Lanka