மருதமுனையைச் சேர்ந்த ஜே.முகம்மது பஹீம் மௌலவி கந்தளாய் குளத்தில் நீராடச் சென்ற வேளை உயிரிழப்பு » Sri Lanka Muslim

மருதமுனையைச் சேர்ந்த ஜே.முகம்மது பஹீம் மௌலவி கந்தளாய் குளத்தில் நீராடச் சென்ற வேளை உயிரிழப்பு

ja

Contributors
author image

P.M.M.A.காதர்

மருதமுனை பாண்டிருப்பு அல்-மினன் வீதியைச் சேர்ந்த ஜே.முகம்மது பஹீம் மௌலவி (வயது 21)இன்று காலை கந்தளாய் குளத்தில் நீராடச் சென்ற வேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவர் நான்கு மாதகால மார்க்கப் பணிக்காக (ஜமாஆத்)சென்றிருந்த போதே இந்த அகால மரணம் ஏற்பட்டுள்ளது.

இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று(12-10-2017)மாலை மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இவர் மருதமுனை மீமா சமூக சேவை அமைப்பின் கலாச்சாரப் பிரிவின் தவிசாளரும்,கிரிக்கட் அணியின் உதவித் தலைவருமாவார்.

ja

Web Design by The Design Lanka