மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் 07 மாணவர்கள் மருத்துவத் துறைக்குத் தெரிவு » Sri Lanka Muslim

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் 07 மாணவர்கள் மருத்துவத் துறைக்குத் தெரிவு

al-manar

Contributors
author image

P.M.M.A.காதர்

தற்போது வெளியாகியுள்ள 2016ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீடசைக்கான பெறுபேறுகளின் அடிப்படையில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் 42 மாணவர்கள் பல்கலைக்கழம் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளதாகவும்,இவர்களில் ஏழு மாணவர்கள் மருத்துவத் துறைக்குத் தெரிவாகியுள்ளதாகவும் அதிபர் எம்.ஏ.எம்.இனாமுல்லா தெரிவித்தார்

168 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்து 149 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர் இவர்களில் 102 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 42 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். பல மாணவர்கள் கல்விக்கல்லூரி மற்றும் ஏனைய துறைகளுக்கும் தெரிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கலைப் பிரிவில் 12 மாணவர்களும்,வர்த்தகப் பிரிவில் 5 மாணவர்களும்,விஞ்ஞானப் பிரிவில் 18 மாணவர்களும்,கணிதப் பிரிவில் 7 மாணவர்களுமாக 42 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளனர். விஞ்ஞானப்பிரிவில் எம்.ஐ.முகமட் ஜெஸான்,வர்த்தகப்பிரிவில் எம்.ஜே.ஜெனிப் ஹஸ்மத்,ஏ.எஸ்.முகமட் சனோஜ் ஆகியோர் 3.ஏ. சித்திகளைப் பெற்றுள்ளனர்.

எம்.ஐ.எம்.ஜெஸான்,ஆர்.எப்.அஸீபா,எம்.கே.எம்.அப்றாத்,ஏ.யு.எம்.மியாத்,எம்.யு.எப்.ஜீனாஸ்;,எம்.ஏ.எம்.அகீல்,ஏ.றிஸ்தா ஆகியயோரே மருத்துவத்துறைக்குத் தெரிவான மாணவர்களாவர் .

Web Design by The Design Lanka