மருதமுனை நிதிஸ் முகம்மட் நிலாவெளி கடலில் மூழ்கி வபாத் » Sri Lanka Muslim

மருதமுனை நிதிஸ் முகம்மட் நிலாவெளி கடலில் மூழ்கி வபாத்

nithi

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

திருகோணமலை – நிலாவெளி கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளது.

மருதமுனை – கஸ்ஸாலி வீதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குடும்பத்துடன் சுற்றுலா சென்று குளித்துக் கொண்டிருக்கும் போது, நீரில் மூழ்கிய தன் சகோதரரைக் காப்பாற்றச் சென்ற வேளையே இவர் இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளார்.

சடலம் நிலாவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் காப்பாற்றப்பட்ட மற்றைய நபர் அதே வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சகோதரர்கள் இருவரும் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Web Design by The Design Lanka