மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்துள்ள தமிழ் இலக்கியக் கருத்தரங்கு 28ஆம் திகதி » Sri Lanka Muslim

மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்துள்ள தமிழ் இலக்கியக் கருத்தரங்கு 28ஆம் திகதி

jame

Contributors
author image

P.M.M.A.காதர்

மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்துள்ள தமிழ் இலக்கியக் கருத்தரங்கு இம்மாதம் 2017-01-28ஆம் திகதி முழுநாள் அமர்வாக மருதமுனை பொது நூலக பிரஜைகள் வளநிலையத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளது.

இந்த கருத்தரங்கில் கிழக்கு மாகாண தமிழ்,முஸ்லிம் இலக்கியப் படைப்பாளிகளுக்கு விழிப்புணர்வையும்,படைப்பாளர்களின் படைப்புக்களினது சமகால நிலைமைகளை ஆராய்வதும், மதிப்பிடுவதுமே இந்தக் கருத்தரங்கின் நோக்கமாகும்.

இந்தக் கருத்தரங்கில்; எதிர்காலத்தில் இலக்கிய செயல்நெறியினை இனங்காண்பதை நோக்காகக் கொண்டு ஆய்வரங்கொன்றும் நடாத்தப்படவுள்ளது.அதற்கமைவாக கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு கவிதைகள்,சிறுகதைகள் மற்றும் நாவல்கள் பற்றி தெரிவு செய்யப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்படவுள்ளது.

இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புகின்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் எதிர்வரும் 2017-01-15ஆம் திகதிக்குமுன் கவிஞர் ஜமீலுடன் நேரடியாகவோ அல்லது பின்வரும் 0779689392-0776009200 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடோ தொடர்பு கொண்டு பெயர்களைப் பதிவு செய்துகொள்ள முடியும்.

Web Design by The Design Lanka