மருதமுனை மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு » Sri Lanka Muslim

மருதமுனை மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

12

Contributors
author image

A.L.M.Sinas

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (11.08.2017) பிரதேச செயலாளர் எம்.எச் முஹம்மட் கனி தலைமையில் மருதமுனை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மருதமுனை,பெரியநீலாவனை கிராம மக்களுக்கு இங்கு முதல் கட்டமாகவாழ்வாதார பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் HMM.ஹரிஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி AM.ரக்கீப், AR.அமீர், MS.உமர் அலி,MM.முஸ்தபா ஆகியோரும் மேலும் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.இராஜதுரை,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் AR.சாலிஹ்,மருதமுனை,நற்பிட்டிமுனை சமூர்த்தி வங்கி முகாமையாளர் சட்டத்தரணி MM.முபீன்,பிரதி அமைச்சரின் இணைப்பாளர் நெளவர் A பாவா,K.தெளபீக் உட்பட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Web Design by The Design Lanka