மருதமுனை மத்திய கல்லூரியின் “ஷம்ஸ் தினம்-2018”நிகழ்வையொட்டி பழைய மாணவர்கள் பங்கு கொள்ளும்;; கிரிக்கட் சுற்றும் போட்டி » Sri Lanka Muslim

மருதமுனை மத்திய கல்லூரியின் “ஷம்ஸ் தினம்-2018”நிகழ்வையொட்டி பழைய மாணவர்கள் பங்கு கொள்ளும்;; கிரிக்கட் சுற்றும் போட்டி

SHAMS DAY-2018

Contributors
author image

P.M.M.A.காதர்

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின்; பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அணிக்கு 11பேர் கொண்ட 5 ஓவர் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்; போட்டிக்கான அணிகளை நிரல்படுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(08-04-2018)ஷம்ஸ் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளதாகவும் சுற்றும் போட்டிக் குழுத் தலைவர் என்.எம்.அனீஸ் அஹமட் தெரிவித்தார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் ‘ஷம்ஸ் தினம்-2018’நிகழ்வையொட்டி பாடசாலையின் பழைய மாணவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கிடையிலான உறவைப் புத்துணர்டையச் செய்வதற்காகவும் ‘ஷம்ஸ் தினம்-2018’ நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் பழைய மாணவர் சங்கத்தினால் இந்தச் சுற்றுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலையின் பழைய மாணவர்களைக் கொண்ட 35 அணிகள் இந்தச் சுற்றுப் போட்டியில் பங்குபற்றவுள்ளன அணிக்கு 11பேர் கொண்ட 5 ஓவர் மென்பந்து கிரிக்கட் சுற்றும் போட்டி இம்மாதம் 28ஆம்,29ஆம்.திகதிகளில் ஷம்ஸ் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக சுற்றும் போட்டிக் குழுத் தலைவர் என்.எம்.அனீஸ் அஹமட் மேலும் தெரிவித்தார்

Web Design by The Design Lanka