மருதமுனை ஷம்ஸ் தேசிய பாடசாலை மறக்க முடியாத பெயர் முஸாதிக்..! - Sri Lanka Muslim

மருதமுனை ஷம்ஸ் தேசிய பாடசாலை மறக்க முடியாத பெயர் முஸாதிக்..!

Contributors

மருதமுனை – அல் மனார் மற்றும் ஷம்ஸ் மத்திய கல்லூரிகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டது பழைய கதை.

புதிய கதை – இதற்கு யார் காரணம் என்பது ? அதனோடு , அது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள்..

நான் அப்படி முயற்சிக்கிறேன் ! இப்படி முயற்சித்தேன் ! வெட்டியதை சேர்த்தேன் , பிரித்தேன் என்று கொக்கரித்தவர்களெல்லாம் – இரு பாடசாலைகளும் ஒரே நேரத்தில் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்ட செய்தி வெளியானதை அடுத்து மௌனிகளாகி விட்டார்கள்.

அது அப்படியே இருக்க ,

ஷம்ஸ் மத்திய கல்லூரி – ஷம்ஸ் தேசிய பாடசாலையாக தரம் உயர பலர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இருப்பதை இந்த இடத்தில் நாமும் அந்த சமூகமும் நன்றியுடன் நினைவு கூறி வருகின்றது.

அந்த வகையில் – முஸாதிக் Tex உரிமையாளர் முஸாதிக்கின் அர்ப்பணிப்பு – இன்று மருதமுனை எங்கும் சிலாகித்து பேசப்படுவதை அவதானிக்க முடிகிறது.

அல் மனார் மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்த ” நான் தான் காரணம்” என்று முன்னர் கூறித் திரிந்த எவருமே – முஸாதிக்கைப் போல் துணிச்சலாக பதிவிடாதது ஏன் ? என்ற கேள்வியும் – இன்று மருதமுனை மக்கள் மத்தியில் எழுப்பப்படுகின்றது.

அனைத்துக்கும் – மருதமுனையில் ஆளுமைகள் உண்டு. எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும் என்றடிப்படையில் – கிழக்கு பிரதம செயலாளருடனான தனது தனிப்பட்ட நட்பை – மருதமுனை சமுகத்தின் பல்வேறு நலன்களுக்காக உபயோகப்படுத்தியிருக்கிறார் முஸாதிக்.

அந்த வகையில் – ஷம்ஸ் மத்திய கல்லூரி , தேசிய பாடசாலையாக தரம் உயரும் விடயத்திலும் பிரதம செயலாளருடனான தனது நட்பை பயன்படுத்தி – ஷம்ஸ் தரம் உயர்வில் தனது மகத்தான பங்களிப்பை வழங்கியிருக்கிறார் என்பது அவரது முகநூல் பதிவில் துலாம்பரமாக எடுத்துக் காட்டப்படுகின்றது.

ஷம்ஸ் தரம் உயர்வுக்காக – தான் ஆற்றிய அர்ப்பணிப்பை , உரிய நபர்களின் பெயர், சந்தர்ப்பம் என்பவற்றை பகிரங்கமாக கூறியிருப்பதன் மூலம் – அவரது உண்மைத் தன்மை வெளிச்சமிட்டு காட்டப்படுகின்றது.

முஸாதிக்கின் – முகநூல் பதிவு இதுதான் :-

தேசிய பாடசாலைப் பட்டியலில் நிராகரிக்கப்பட்ட சம்ஸ் மத்திய கல்லூரி ! மீண்டும் எவ்வாறு உள்வாங்கப்பட்டது?


எனது நீண்ட கால நண்பரும் சம்ஸ் மத்திய கல்லூரியின் பிரதி அதிபருமான ராஜி சேர் என்னுடன் தொடர்பு கொண்டு எமது பாடசாலை சம்பந்தமாக அதிபர் உங்களோடு பேச வேண்டும் என்றார். நோன்புகால வியாபார மும்முரத்தில் இருந்த நான் வேலைகளை முடித்து விட்டு சந்திப்பதற்காக அன்றிரவே சம்ஸ் மத்திய கல்லூரிக்குச் சென்றேன். அங்கு அதிபர் சக்காப் சேரும் ராஜி சேரும் அஜ்மல்கான் சேரும் இருந்தனர்.

அப்போது சக்காப் சேர் கூறினார் சம்ஸ் மத்திய கல்லூரியின் பெயர் தேசியப் பாடசாலை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. நீங்கள் பிரதம செயலாளருடன் உறவு என்பதால் அவரால் மட்டுமே இது முடியும். செயலாளர் அன்சார் சேரும் உங்களுடன் பேசச் சொன்னார் என்றனர்.

விடயத்தை எல்லோரும் தெளிவுபடுத்தியதன் பின்னர் அதிபரின் தொலைபேசியின் ஊடாக நவாஸ் லோயரும் அவ்விடத்தில் வைத்தே தொலைபேசியில் என்னுடன் பேசி பிரதம செயலாளருடன் கதைத்து இவ்விடயத்தினை செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.

அன்று இரவு ஒன்பது மணியையும் தாண்டியதால் நாளை காலை கதைப்பதாகக் கூறினேன். மறுநாள் பிரதம செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தைச் சொன்னேன். அவர் எனக்காக அதனைச் செய்து தருவதாகக் கூறினார்.

இதனை அதிபரிடம் கூறிய போது இது போதாது திருகோணமலைக்குச் சென்று இவ்விடயத்தினை முடித்துக் கொண்டு வரலாம் என அதிபர் கூறினார். தேவையில்லை சேர் நான் மாத்திரம் போதும். நாளை நான் போய் முடித்து விட்டு வருகிறேன் என்று கூறி மறுநாள் ஒரு மணியளவில் எனது வாகனத்தில் திருகோணமலைக்குச் சென்றேன்.

அப்போது மாலை நேரம் ஆகியதால் செயலாளரின் இருப்பிடத்திற்குச் சென்று சந்தித்து விடயத்தைக் கூறினேன். அவர் உடனடியாக மாகாணப் பணிப்பாளர் நிசாம் சேருடன் தொடர்பு கொண்டு விடயத்தைச் சொன்னார். அந்த இடத்தில் வைத்தே அதிபரையும் அஜ்மல்கான் சேரையும் பிரதம செயலாளருடன் பேச வைத்து சம்ஸ் மத்திய கல்லூரி உள்வாங்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தினேன்.

இவ்விடயம் முடிந்து வீடுவரத் தயாரான போது மீண்டும் அதிபர் தொடர்பு கொண்டு நிஸாம் சேர் கூறியதாக பிரதம செயலாளர் ஓகே பண்ணிவிட்டார். அவர் மூலமாக கவர்ணருக்கும் விடயத்தைக் கூற வையுங்கள் என்று கூறியதாகச் சொன்னார்.

அன்று மாலை வேளை ஆகியதால் உதவி பெறுவதற்காக இன்னுமொருவரை சங்கடப்படுத்தக் கூடாதே என எண்ணி அன்று திருகோணமலையில் தங்கி மறுநாள் காலை அவரது அலுவலகம் சென்று கவர்ருடனும் பிரதம செயலாளரைக் கதைக்க வைத்தேன்.

பிரதம செயலாளர், கவர்ணர், மாகாணப் பணிப்பாளர் ஆகியோர்களுக்கிடையிலான தொலைபேசி உரையாடல்களின் பின்னர் சம்ஸ் மத்திய கல்லூரியின் பெயர் உள்வாங்கப்பட்ட செய்தியை அதிபருக்கும் ராஜி சேருக்கும் தெரியப்படுத்தினேன்.

சம்ஸ் மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்த பலரின் பங்களிப்பு இருந்தது மறுக்க முடியாத உண்மை இருப்பினும் இறுதியில் தேசிய பாடசாலை பட்டியலில் இருந்து நிராகரிக்கப்பட்ட வேளையில் அதனை மீண்டும் தேசிய பாடசாலை பட்டியலில் உள்வாங்குவதில் முதன்மையானவர் “கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித வணசிங்க” என்பதில் எந்த விதமான மாற்றுக்கருத்துகளுக்கும் இடமில்லை……

Web Design by Srilanka Muslims Web Team