மருத்துவர் வெளியிட்ட பச்சிளம் குழந்தையின் புகைப்படம்...! » Sri Lanka Muslim

மருத்துவர் வெளியிட்ட பச்சிளம் குழந்தையின் புகைப்படம்…!

FB_IMG_1602830819302

Contributors
author image

Editorial Team

மருத்துவர் வெளியிட்ட பச்சிளம் குழந்தையின் புகைப்படம்… ஆண்டின் சிறந்த படம் என கொண்டாடும் மக்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மகப்பேறு மருத்துவர் ஒருவர் வெளியிட்ட பச்சிளம் குழந்தையின் புகைப்படம் இணையதளத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று மருத்துவர் அணிந்திருந்த மாஸ்கை, கைகளால் பறிக்கும் அந்த புகைப்படமே தற்போது இணையத்தில் கோண்டாடப்பட்டு வருகிறது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் தத்தளித்துவரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது எதுவரை நீளும் என்ற கேள்வியே பொதுமக்கள் பலரும் எழுப்பி வரும் நிலையில்,

தற்போது மாஸ்க் இனி தேவையில்லை என்ற குறியீடாக மருத்துவர் வெளியிட்ட அந்த பச்சிளம் குழந்தையின் புகைப்படம் பார்க்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றும் மருத்துவர் Samer Cheaib என்பவரே தமது பேஸ்புக் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

குழந்தை மருத்துவர் Samer Cheaib-ன் மாஸ்கை பறிக்க, அவர் முகம் மலர அதை ஆமோதிக்கிறார்.

அந்த புகைப்படத்தை வெளியிட்ட மருத்துவர் Samer Cheaib, மாஸ்க் பயன்பாடு இனி தேவையில்லை என்பதன் குறியீடு இது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

பலரும் அந்த புகைப்படத்தை கொண்டாடியதுடன், குழந்தைக்கு தெரிந்திருக்கிறது, இனி மாஸ்க் இல்லாமல் சுவாசிக்க இதுதான் சரியான தருணம் என்று, என குறிப்பிட்டுள்ளனர்.

Web Design by The Design Lanka