மர்மமான முறையில் அக்குறணை பாடசாலை மாணவி மரணம். - Sri Lanka Muslim

மர்மமான முறையில் அக்குறணை பாடசாலை மாணவி மரணம்.

Contributors

அக்குறணை, குருந்துகஹஎல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குருந்துகஹஎல பிரதேசத்தைச் சேர்ந்த மல்வானஹின்ன பாடசாலையில்9 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மொஹமட் ராசிக் ஆயிஷா என்ற 14வயதுடைய மாணவியே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் சகோதரி, மூன்று தினங்களுக்கு முன்னர் தனது கணவரின் சகோதரனுடனான காதலை நிறுத்திகொள்ளுமாறு சிறுமியை எச்சரித்துள்ளார்.

இதனையடுத்து மனம் நொந்து காணப்பட்ட சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இது தற்கொலையா அல்லது கொலையா என விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என அலவத்துகொடை  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(MP)

Web Design by Srilanka Muslims Web Team