மர்ஹூம் அஸ்ரபின் நினைவு தினத்தை ஒட்டி உதுமான்கண்டு நபீர் விடுக்கும் விசேட அறிக்கை - Sri Lanka Muslim

மர்ஹூம் அஸ்ரபின் நினைவு தினத்தை ஒட்டி உதுமான்கண்டு நபீர் விடுக்கும் விசேட அறிக்கை

Contributors
author image

முஸ்லிம் மக்கள் கட்சியின் ஊடகப்பிரிவு

இலங்கை முஸ்லிம்களிற்கு அரசியல் முகவரி கொடுத்த மு.கா இன் ஸ்தாபாக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள் எம்மை விட்டு பிரிந்து சென்று 14 வருடங்கள் கடந்து சென்று விட்டன.இற்றை வரை அவருடைய பணியினை விட்ட இடத்திலிருந்து தொட்டுச் செல்லவும்,அவருடைய இடத்தை  யாராலும் நிரப்ப முடியாமல் இருப்பதும் அவருடைய ஆளுமைகள்,ஆற்றல்களை மென் மேலும் எமக்கு உறுதிப்படுத்தி நிற்கிறது.

 

சமூகத்திற்காக உதித்து மறைந்த மர்ஹூம் அஸ்ரபின் அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் பிராத்திக்குமாறு எமது கட்சி மக்களிடம் கோரிக்கை விடுக்கிறது.இச் சந்தர்ப்பத்தில் அவருடைய குடும்பங்களையும் நியாபகப் படுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.அவருடைய தியாக வரலாறுகள்,வார்த்தைகளை எமது சமூகம் நியாபகப் படுத்தி அதிலுள்ள படிப்பினைகளை உள் வாங்கி நாம் செயற்படுதலின் தேவையை உணர்ந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

 

முஸ்லிம்களிற்காக தனது வாழ்வையே தியாகம் செய்து முஸ்லிம்களின் விடிவுக்காக போராடி தனது உயிர் உட்பட பல உயிர் தியாகங்களை செய்து உருவாக்கிய மு.கா இன்று சுயநல வாதிகளின் பிடியில் அகப்பட்டு சோரம் போய்க் கொண்டிருப்பதானது அவருடைய தியாகத்தை கொச்சை படுத்திக் கொண்டிருக்கிறது.அதனை முஸ்லிம் சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது நாம்   மர்ஹூம் அஸ்ரப் அவர்களிற்கு செய்கின்ற மா பெரும் துரோகமாகும்.எனவே,இக் கட்சியை சுய நல வாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்க புறப்படுங்கள் என   முதற் கண் எமது கட்சி மக்களிடம் வேண்டிக்கொள்கிறது.

 

மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினது ஆட்சிக் காலத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காமையே தனது தீர்வுப் பொதிகளை சாதித்துக் கொள்ள இயலாமல் உள்ளது என கூறி பல தடவை ஆதங்கப் பட்டுள்ளார்.இப்போது பெரும்பாண்மை உள்ளது.தீர்வுப் பொதி எங்கே??தற்போதைய தலைவர் பெற்றுத் தர முயற்சிக்கிறாரா??என எமது கட்சி மக்களிடம் சிந்திக்க வேண்டுகிறது.

 

அஸ்ரப் அவர்கள் மு.கா ஐ உருவாக்காது போய் இருந்தால் முஸ்லிம்களினது திசை வேறு பக்கமாக திரும்பி இருக்கும்.முஸ்லிம்களின் இருப்புக்கள் கேளவிக்குரியாகியாகி இருக்கும்.காலங்கள் கடந்தாலும் தலைவன் மரணிப்பதில்லை என்ற தனது கூற்றுக்கு .தானே உயிரோட்டம் கொடுத்துள்ளார் மர்ஹூம் அஸ்ரப்.

Web Design by Srilanka Muslims Web Team