மர்ஹூம் ஹில்மி அவர்களின் நினைவாக, பதுளை UCMC நலன்புரி நிலையத்திற்கு கழுவு இயந்திரம் கையளிப்பு » Sri Lanka Muslim

மர்ஹூம் ஹில்மி அவர்களின் நினைவாக, பதுளை UCMC நலன்புரி நிலையத்திற்கு கழுவு இயந்திரம் கையளிப்பு

dd77

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

பதுளை பதுளுபிடியை சேர்ந்த ஜனாப் முஸம்மில் மற்றும் ஹைரியா தம்பதிகளின் ஒரே புதல்வனான 25 வயதுடைய எம் ஹில்மி அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப் பட்டு அகால மரணமடைந்தார்கள்.

பதுளை சசெக்ஸ் விளையாட்டு கழகத்தின் வினைத்திறனான துடிப்புமிகுந்த வாலிபரான இவர் மார்க்கப் பற்றுள்ளவராகவும் அனைவரினதும் அன்பை ஆதரவை பெற்றவராகவும் திகழ்ந்தார். இவரின் பிரிவுத் துயரால் கவலைக்குள்ளான சசெக்ஸ் விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, புற்றுநோய் மற்றும் பாரிய நோய்களுக்குள்ளான நோயாளர்களை பராமரிக்கும் பதுளை UCMC நலன்புரி நிலையத்திற்கு கழுவு இயந்திரம் ஒன்றை வழங்கி வைத்தார்கள்.

சசெக்ஸ் விளையாட்டு கழக தலைவரும் பிரபல சமூக சேவகருமான ஜனாப் ஹிஷாம் அவர்களின் வாளிக்காட்டளின் கீழ் மர்ஹூம் ஹில்மி அவர்களின் பெற்றார்கலான ஜனாப் முஸம்மில் மற்றும் ஹைரியா தம்பதிகள் மூலம் மேற்படி கழுவு இயந்திரம் கையளிக்கப் பட்டது.

இந் நிகழ்வில் உரை நிகழ்த்திய UCMC செயலாளர் எம் பி செய்யத் ஆசிரியர் அவர்கள் கருத்துக் கூறும் போது “ இன்று எமது சமூகம் எதிர்கொண்டுள்ள சவால்கள் நிறைந்த சூழ்நிலைகளை சாதுரியமாக எதிர்கொள்ள எமது இளைஞர் சமூகம் சரியான பாதையில் வழிகாட்டப் பட வேண்டும்.

இளைஞர் சக்தியை ஒற்றுமையுடன் ஒன்றுபடுத்தி இவ்வாறான முன்மாதிரியான நற்பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் . அந்த வகையில் சகோதரர் ஹிஷாம் அவர்கள் தம்முடன் கைகோர்த்துள்ள இளைஞர்களுக்கு முறையான வழிகாட்டல்களை வழங்கி வருவது மன நிறைவை தருகின்றது.

மறைந்த சகோதரன் ஹில்மி அவர்களை பற்றி அனைவருமே நல்லதையே கதைக்கின்றார்கள். அவரின் மறைவு ஈடு செய்ய முடியாதது என்றாலும் அல்லாஹ்வின் முடிவை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். அவரைப் போல் நோயால் பாதிக்கப் பட்டவர்களின் நலனுக்காக இன்று நீங்கள் முன் வந்து செய்த இந்த உதவியை நிச்சயமாக அல்லாஹ் பொருந்திக் கொள்வான்.

சசெக்ஸ் விளையாட்டு கழகத்தின் சமூகப் பணி சிறக்கவும் மர்ஹூம் ஹில்மி அவர்களின் மறுமை வாழ்வு வெற்றி பெறவும் UCMC தொண்டர்கள் அனைவரும் என்றென்றும் துஆச் செய்கின்றோம் “ என்றும் கருத்துரைத்தார்.

dd.jpg22 dd77

Web Design by The Design Lanka