மறுமையில் பெண் மகபேற்று வைத்திய நிபுனரைப்பற்றி ஒட்டு மொத்த சமூகமுமே விசாரிக்கப்படுவார்கள் - Sri Lanka Muslim

மறுமையில் பெண் மகபேற்று வைத்திய நிபுனரைப்பற்றி ஒட்டு மொத்த சமூகமுமே விசாரிக்கப்படுவார்கள்

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

ஒரு காலம் இருந்தது அந்தக் காலத்தில் மருத்துவிச்சி என்று சொல்லப்படுகின்ற பாட்டிமார்களின் உதவியை கொண்டு வீட்டிலேலே சுகப் பிரவசம் மூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வார்கள் நம் தாய்மார்கள், நாம் எல்லோரும் பெரும்பாலும் அப்படிதான் பிறந்திருப்போம், ஆனால் இன்று கருவில் குழந்தை உருவான நாள் முதலந்த குழந்தை இந்தப் பூமியை தொடும் காலம் வரை எந்த நேரமும் நம் பெண்கள் மகப்பேற்று வைத்தியரையே OBSTETRICIAN GYNECOLOGIST SURGEON (V,O,G) நாடும் அத்தியவசிய வைத்திய தேவையை கொண்டுள்ளார்கள்.

 

கணவன்மார்கள் யாரோ ஒரு அந்நியா ஆணிடம் அல்லது பெண்ணிடம் தன் மனைவிமார்களை மகப்பேற்று மருத்துவரீதியான அத்தனை செக்கப்புகளுக்கும் அழைத்துச் சென்று செக்கப் முடியும் வரை வெளியில் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். வைத்தியர் என்ற ரீதியில் அந்நியா ஆணாக இருந்தாலும் அது தவறான விடயமல்ல. ஆனால் ஒரு கணம் நாம் அனைவரும் சிந்திக்க கடைமைப் பட்டுள்ளோம்.அதாவது இந்த விடயத்தில் முஸ்லிம் பெண்மருத்துவர்கள் இருந்தால் அது எவ்வளவு பெரிய ஆறுதலான ஒரு விடயமாகவும், காலத்தின் கட்டாய தேவையாகவும் இருக்கும்.

 

மகப்பேற்று மருத்துவம் என்பது வெறுமையாக ஒரு தொழில் மாத்திரமல்ல அது ஒரு பெரிய சமூகப்பனி. இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பர்ளு கிபாயா என்ற பார்வையில் ஒரு பிரதேசத்தை அன்டியுள்ள ஒட்டு மொத்த சமூகமும் மறுமையில் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆகவே அந்த சமூகப்பனிக்கு எமது பெண் பிள்ளைகளையும் நாம் படிக்க வைக்க வேண்டும், அவர்களையும் அத்துறைகள் சர்பாக ஊக்குவிக்க வேண்டும்.

 

ஆனால் பொதுவாக முஸ்லிம் பெண்கள் வைத்திய துறையில் அதாவது மகப்பேற்று சத்திரசிகிச்சை நிபுனர் துறையை தேரிவு செய்வதில் நாட்டம் அற்றவர்களாகவே காணப்படுகின்றனர். இதற்கு முக்கியமாக கருதப்படுவது இந்த மகப்பேற்று துறையானது அதிகளவாக சத்திரசிகிச்சையினை அடிப்படையாகக் கொண்டு காணப்படுவதனாலும்,பெண்கள் இளகிய உள்ளத்தினை (sensitive) கொண்டதினாலும், இஸ்லாமிய சமூகம் என்ற பார்வையில் பர்ளு கிபாயா என்ற கடமையின் அடிப்படையில் பெண் மகப்பேற்று மருத்துவரின் தேவையை பற்றி இஸ்லாமிய மார்க்கச் சட்டம் சொல்லும் ஆனித்தரமான கருத்துக்களை அரியாதவர்களாக எமது சமூகம் காணப்படுவதினாலும் எமது சமூகத்தில் விரல் விட்டு என்னக்கூடிய அளவுக்கு கூட பெண் மகப்பேற்று மருத்துவர்களின் சேவையினை பெற முடியாதவர்களாக எமது சமூகத்தினர் காணப்படுகின்ரனர்.

 

சாதாரனமாக நாம் மிகத் தூய்மையாகவும் உணர்ச்சிகரமாகவும் இஸ்லாத்தை பின்பற்றுவர்களாக, எமது பெண் பிள்ளைகளையும், தாய்மார்களையும் , மனைவிமார்களையும் இஸ்லாத்தின் வரையறைக்குள் வாழவைத்தது மட்டுமல்லாமல், அன்நிய, மஃறமியான ஆண்களுக்கு மத்தியில் எமது பெண்களை இஸ்லாமிய முறைப்படி ஆடையனியச்செய்து வெளியில் அழைத்துச் செல்கின்றோம்.

 

ஆனால் கர்ப்பம் என்றோ, மகப்பேறு என்றோ வந்துவிட்டால் எமக்கிருக்கும் இஸ்லாமிய உணர்ச்சி, பாசம், சமூகநோக்கு என்பவற்றை புறம்தள்ளிவிட்டு அந்த அந்நிய மஃறமியான ஆண்வைத்தியரின் அரைக்குள் எமது மனைவியையோ, சகோதரியையோ செக்கப் என்ற அந்த வைத்திய தேவை கருதி கதவை கூட நாம் சாத்திவிட்டு வெளியே வந்துவிடுகிறோம். இதற்கு எமது ஒட்டு மொத்த சமூகமே பர்ளுகிபாயா என்ற வகையில் பொறுப்பு கூற வேண்டும்.ஒரு உண்மையான இஸ்லாமியனோ அல்லது நூறு வீதம் சுய புத்தியுள்ள ஒரு ஆணோ வைத்தியரின் கதவை சாத்திவிட்டு வந்து நிம்மதியாக ஒரு செக்கன் கூட இருக்கமாடான். ஆனால் அவன் இஸ்லாம் கூறும் பர்ளுகிபாயா என்றவிடயத்தை மறந்து விடுவான்.

 

எமது சமூகத்தில் அதிதிறமை வாய்ந்த மாணவிகள் காணப்படுகின்றனர்., அவர்கள் வைத்தியராகவும் வருகின்றார்கள். ஆனால் அவர்கள் நான் மேற்கூறிய முக்கிய காரணங்களினால் மகப்பேற்று நிபுனர்களாக தங்களது மேற்படிப்பினை மேற்கொள்வதில் முற்றிலும் தயக்கம் காட்டுகிறார்கள். மேலும் திறமையான மாணவிகள் எமது பிரதேசத்தில் இருந்தும் அவர்களின் குடும்ப பொருளாதார நிலை கல்விக்கு ஈடுகொடுக்க முடியாத நிலை காரணமாக மளுங்கடிக்கப் படுகின்றார்கள்., இதை முற்றிலும் உணர்ந்த எமது இஸ்லாமிய உலமாக்களும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்கள் மத்தியில் பாரிய விழிப்புனர்ச்சியை ஏற்படுத்தி எமது இஸ்லாமிய கோட்பாட்டின் அடிப்படையில் எமது சமூகத்தில் இருந்து மிகக்கட்டாயமாக எதிர்காலத்தில் பெண் மகப்பேற்று நிபுனர்கள் உருவாவதற்கு இந்த உணர்ச்சி பூர்வமான இஸ்லாமிய தார்மீகக் கடமையை செய்யவேண்டும்.

 

இந்த பிரச்சனைகள் ஒரு புறமிருக்க, பர்ளுகிபாயா என்ற கடமையின் அடிப்படையில் எமது சமூகத்தில் இருக்கும் செல்வந்தர்கள் மட்டுமல்லாது, ஒருமித்த குரலுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது பிரதேசத்தில் தனது மகப்பேற்று வைத்திய நிபுனராகும் கணவுடன் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் மாணவிகளை இனம்கண்டு அவர்களுக்குரிய அனைத்து செலவினையும் பொறுப்பெடுத்து அவர்களில் ஓரிருவரையாவது இஹ்லாசான உயரிய சமூக நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு பெண் மகபேற்று மருத்துவ நிபுனர்களாக உருவாக்க வேண்டும். இதற்கு எமது பிரதேசங்களில் இயங்குகின்ற ஸக்காத் நிதியமானது பாரிய பொருப்பினை பங்கேற்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

 

38

 

35

 

36

 

37

Web Design by Srilanka Muslims Web Team