மறைக்க ஒன்றுமில்லை! மோசமான காலம் வந்துவிட்டது - எதற்கும் தயாராக இருங்கள்..! - Sri Lanka Muslim

மறைக்க ஒன்றுமில்லை! மோசமான காலம் வந்துவிட்டது – எதற்கும் தயாராக இருங்கள்..!

Contributors

டெல்டா வைரஸின் புதிய திரிபுகள் உருவாகி வருகின்றன. இதனால் நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன கூறினார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை மோசமாக உள்ளது. இதில் மறைக்க ஒன்றுமில்லை.

அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானவை. அதிக நோயாளிகள் அறிவிக்கப்படும் காலம் வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

எனவே அத்தியாவசிய தேவைகளைத் தவிர வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அப்படி வெளியே வரும்போது வைரஸ் பரவும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் டெல்டா வகை இப்போது நம் நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது.

தினமும் ஏராளமானோர் நோய்வாய்ப்படுவதுடன் உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன.

இந்த வைரஸ் மிகவும் தீவிரமானது. இது உடலில் ஒட்டிக்கொள்ளவும், நுரையீரலை சேதப்படுத்தவும், உடலை சேதப்படுத்தவும் அதிக வாய்ப்புள்ளது என்று அமைச்சர் கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team