மறைப்பதற்கு எதுவும் இல்லை – ஜனாதிபதி! - Sri Lanka Muslim
Contributors

நாடு என்ற வகையில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா ஆகியோர்  தலைமையில் நடைபெற்றது.

உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலரும் இதன்போது  கலந்துகொண்டிருந்தனர்.

பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைவரும் பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்காக ஒன்றிணைய வேண்டும் என இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி தெரிவித்த கருத்து –

“இவ்வாறான முக்கியமானதொரு மாநாட்டை இலங்கையில் நடத்துவற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை மற்றும் பொதுவானதொரு தொனிப்பொருளில் பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்கள் தமது கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். 2013 ஆம் ஆண்டின் தொனிப்பொருள் “அபிவிருத்திக்காக தேசத்தால் ஒன்றிணைவோம்” என்பதாகும். இது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது. அபிவிருத்தியில் அனைவரையும், உள்வாங்குவது சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதிக்கின்றது. பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைவரும் பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்காக ஒன்றிணைய வேண்டும். குறிப்பாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள். இதன்போது எவரும் நிர்க்கதி நிலைக்குள் தள்ளிவிடப்பட மாட்டார்கள்”

இம்முறை பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு நன்றி தெரிவிப்பதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

கமலேஷ் ஷர்மா தெரிவித்த கருத்து –

“பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு இன்னும் ஒரு நாள் உள்ளது. இந்த வாரம் முழுவதும் நெருக்கடியான ஒன்றாகும்.  இவ்வாறான சிறந்த – முழுமையான செயற்றிட்டத்தை முன்னெடுப்பதில் காணப்படும் சிக்கல்களை பெருமளவில் குறைத்துள்ளோம். இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு, பொதுத் திட்டமிடல் என்பன இதற்குக் காரணமாக அமைந்துள்ளன. இந்த ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகளுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு நன்றி தெரிவிக்கின்றோம். இந்த நாட்டின் அமைச்சர்கள், மாநாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைவருக்கும் பல்லாயிரக்கணக்கான  இலங்கையர்களுக்கும் அவர்களது அர்ப்பணிப்புக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்”

இதன்போது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு முத்திரையொன்றும், கடித உறையொன்றும் வெளியிடப்பட்டன.

இந்த நிகழ்வில் தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

-nefst

Web Design by Srilanka Muslims Web Team