மற்றுமொரு மருத்துவரையும் பலியெடுத்தது கொரோனா..! - Sri Lanka Muslim

மற்றுமொரு மருத்துவரையும் பலியெடுத்தது கொரோனா..!

Contributors

ஆனமடுவ சுகாதார திணைக்களத்தின் மேலதிக மருத்துவ அதிகாரி டொக்டர் வசந்த ஜெயசூர்யா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜெயசூர்யா இரண்டு குழந்தைகளின் தந்தை மற்றும் கடவத்தையில் வசிப்பவர்.

நீர்கொழும்பு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சில காலம் பணியாற்றி வந்த ஜெயசூர்யா, பின்னர் ஆனமடுவ சுகாதார திணைக்கள அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்.

சுமார் 10 நாட்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர் அங்கொட கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

Web Design by Srilanka Muslims Web Team