மலாலாவுக்கு கெளரவ குடியுரிமை வழங்க கனடா முடிவு - Sri Lanka Muslim

மலாலாவுக்கு கெளரவ குடியுரிமை வழங்க கனடா முடிவு

Contributors

பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்டு மரணத்தில் இருந்து மீண்ட மலாலா யூசுப்சாய்க்கு சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் உயரிய சகாரோவ் மனித உரிமை பரிசு வழங்கப்பட்டது.

இதுதவிர பல்வேறு சர்வதேச கெளரவ

விருதுகளையும் பெற்றுள்ள மலாலா சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்து உரையாற்றினார். இங்கிலாந்து ராணி எலிசபத்தும் மலாலாவை சந்திக்க அழைப்பு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு கெளரவ குடியுரிமை வழங்க கனடா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது வெளியிடப்படும் என தெரிகிறது.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ரவுல் வேலன் பெர்க், நெல்சன் மண்டேலா, தலாய் லபாமா, ஆங்சான் சூகி, நிசாரி இஸ்மாயிவ் மதகுரு அகா கான் ஆகியோருக்கு அடுத்தபடியாக கனடா நாட்டின் கெளரவ குடியுரிமையை பெறும் ஆறாம் நபர் மலாலா என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team