மலேசியாவில் புதிய சட்டம்; இலங்கையர்கள் உட்பட பலர் வேலையிழக்கும் அபாயம் - Sri Lanka Muslim

மலேசியாவில் புதிய சட்டம்; இலங்கையர்கள் உட்பட பலர் வேலையிழக்கும் அபாயம்

Contributors

 

மலேசியா நாட்டு உணவகங்கள், கட்டுமானப் பணிகள், குப்பைகளை நீக்குதல் மற்றும் தோட்டப்பணிகள் போன்றவை வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியே பெரும்பாலும் இயங்கி வருகின்றன. அவர்கள் நாட்டு மக்கள் இத்தகைய வேலைகளை செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.

 

இதனால் இந்தியா, இந்தோனேசியா, வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை  மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து வருபவர்கள் இத்தகைய தொழில்களை இந்நாட்டில் மேற்கொள்ளுகின்றனர். குறிப்பாக இங்குள்ள பெரும்பான்மையான உணவகங்களில் இந்தியர்களே சமையல்காரர்களாகவும், பணியாளர்களாகவும் பணி புரிந்து வருகின்றனர்.

 

இங்கு சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களுக்கும், வெளிநாட்டு பிரஜைகளுக்கும் மலேசியாவின் உள்துறை அமைச்சகமே கேபினெட் கமிட்டியின் செயலகமாக செயல்பட்டு வருகின்றது.

 

மலேசியாவின் துணைப் பிரதமர் முஹ்யுதின் யாசின் தலைமையில் இந்த கேபினெட் கமிட்டியின் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மலேசிய மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் துரித உணவகங்களில் வெளிநாட்டவர்கள் வேலை செய்வது தடுக்கப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

 

அந்நாட்டு மக்கள் இத்தகைய உணவகங்களில் வேலை செய்வதில் ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ளதுதான் அரசின் இந்த முடிவுக்குக் காரணம் ஆகும்.

 

மலேசிய அரசின் இந்த முடிவினை உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவினால் ஏராளமான இந்தியர்கள் – இலங்கை மற்றும் வெளிநாட்டினர் தங்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

 

Web Design by Srilanka Muslims Web Team