மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டிலிருந்து கட்டு கட்டாக பணம், விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் » Sri Lanka Muslim

மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டிலிருந்து கட்டு கட்டாக பணம், விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்

razak

Contributors
author image

Editorial Team

மலேசிய முன்னாள் பிரதம்ர் நஜீப்புக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது 3 கோடி அமெரிக்க டாலர் பணமும், விலை உயர்ந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மலேசியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான வழக்குகளில், தற்போதைய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நஜீப் ரசாக் நிறுவிய மலேசியா வளர்ச்சி நிறுவனம் மூலம் பல கோடி டாலர்கள் பண மோசடியில் நஜீப் ஈடுபட்டதாக பல்வேறு நாடுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக நஜீப் ரசாக்கின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் கடந்த 16-ம் தேதி இரவு முதல் அடுத்த நாள் அதிகாலை வரை விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகின.

இந்நிலையில், நஜீப் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றபட்ட பொருட்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த சோதனையின் போது சுமார் 3 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பணமும், 400க்கும் மேற்பட்ட பைகளும் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட 35 பைகளில் பணமும், 37 பைகளில் விலை உயர்ந்த கை கடிகாரங்கள் மற்றும் ஆபரணங்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka