மஹரகம கபூரியா அரபிக் கல்லூரியின் நீண்ட கால பரிபாலன சபை உறுப்பினர்கள் திடீர் பணி நீக்கம்! - Sri Lanka Muslim

மஹரகம கபூரியா அரபிக் கல்லூரியின் நீண்ட கால பரிபாலன சபை உறுப்பினர்கள் திடீர் பணி நீக்கம்!

Contributors

பெருந்தகை N.D.H.அப்துல் கபூர் அவர்களால் முஸ்லிம் சமூகத்திற்கு பல ஆயிரம் கோடி வழங்கப்பட்ட பெறுமதிமிக்க சொத்துக்களில் மஹரகம கபூரியா குர்ஆன்\ மதரஸாவும், அதற்கு உரித்தான சொத்துக்களும் முக்கியமானதாகும் . தற்போது N.D.H.அப்துல் கபூர் அவர்களின் நான்காவது பரம்பரையில் வந்த ஒரு நபர், அல்ஹாஜ் கபூர் அவர்களால் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கப்பட்ட வக்பு சொத்துக்களை நமக்கு சேர வேண்டிய சொத்துக்கள் என வாதாடி, அவற்றை கைப்பற்றி வருவது நாடறிந்த உண்மையாகும்.

இதனடிப்படையில் இவரினால் இன்னும் சில சொத்துக்களை கையகப்படுத்துதும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

அல்ஹாஜ் N.D.H.அப்துல் கபூர் அவர்களினால் வழங்கப்பட்ட மஹரகமையில் பல ஏக்கர் காணியில் அமைந்துள்ள கபூரியா குர்ஆன் மதரஸாவை கைப்பற்றும் சில முயற்சிகளை இவர் மேற்கொண்டார். இதனை எதிர்த்து பரிபாலன சபை உறுப்பினர்களும்,சமூகத்தின் சில முக்கியஸ்தர்களும் இதை காப்பாற்றும் சமரில் பங்கேற்று வருகின்றனர்.

தற்போது இது நீதிமன்றம் வரைசென்று, இதன் சில பரிபாலன சபை உறுப்பினர்களுக்கு கபூரியா வளாகத்தினுள் நுழைய நீதிமன்றத்தினால் தடையும் விக்கப்பட்டுள்ளது. தற்போது இவரால் இதன் காவலர்களாக சில மாற்றுமதத்தவர்களை நியமித்து, அங்கே தொழுகைக்காக செல்பவர்களுக்கு மாற்றுமத காவலர்கள் சில கெடுபிடிகளையும் செய்து வருகின்றனர்.

நிலைமை இவ்வாறு இருக்க,நீதிமன்றத்தில் இதற்கான வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அக்குறிப்பிட்ட நபரால் நீண்டகால பரிபாலன சபையின் சில மூத்த உறுப்பினர்களும்,அல்ஹாஜ் அப்துல் கபூர் அவர்களின் குடும்ப உறுப்பினர்களான நவாஸ் கபூர், சுபைர் கபூர் மற்றும் குடும்ப உறுப்பினர் அல்லாத ஜஸ்ஸிம் ஆரிப் அவர்களும் பரிபாலன சபையில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும்,இதற்கு பதிலாக கபூரியா அரபிக் கல்லூரியின் சரித்திர வரலாற்றில் முதன்முறையாக, நிர்வாக உறுப்பினர்களாக இரு பெண்கள், அக்குறிப்பிட்ட நபரின் மனைவியும் மனைவியின் சகோதரியும் அக்குறிப்பிட்ட நபரால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

நீண்ட கால மூத்த பரிபாலன சபை உறுப்பினர்களாகவும்,அல்ஹாஜ் அப்துல் கபூர் அவர்களின் குடும்ப உறுப்பினர்களாக இருப்பவர்களின் பணி நீக்கமும், பெண்களின் பணி அமர்வும், அரபிக் கல்லூரியையும் அதன் சொத்துக்களையும் கைப்பற்றும் மற்றுமொரு சூட்சுமமான முயற்சியா? என அச்சம்கொள்ள வேண்டியுள்ளதாக, இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

பேருவளை ஹில்மி-

Web Design by Srilanka Muslims Web Team