மஹரகம முஸ்லிம் கடைகளுக்கு தீ வைத்தவர் சம்பிக்கவின் அணியினர் » Sri Lanka Muslim

மஹரகம முஸ்லிம் கடைகளுக்கு தீ வைத்தவர் சம்பிக்கவின் அணியினர்

sampika

Contributors
author image

Editorial Team

அண்மையில் மஹரகம பிரதேசத்தில் முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்த நபர் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எனவும் பொது பல சேனா உட்பட கடும்போக்குவாதிகளின் பிறப்பிடம் ஜாதிக ஹெல உறுமயவே முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன எனவும் தெரிவித்துள்ளார்.

பொது பல சேனா எனும் அமைப்பும் சம்பிக்கவின் திட்டத்திலிருந்தே பிறந்தது எனவும் கடந்த காலங்களில் அவ்வமைப்பைக் காப்பாற்றியதும் ஜாதிக ஹெல உறுமயவே எனவும் திஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதும் ஞானசாரவை சம்பிக்கவே காப்பாற்றி வருவதாக இலங்கை சமசாஜ கட்சி தலைவர் திஸ்ஸ் விதாரன ஏற்கனவே கருத்து வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka